தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலில் தத்தளித்த வங்கதேச, பர்மீய பிரஜைகளை இலங்கை கடற்படை மீட்டது

Go down

கடலில் தத்தளித்த வங்கதேச, பர்மீய பிரஜைகளை இலங்கை கடற்படை மீட்டது Empty கடலில் தத்தளித்த வங்கதேச, பர்மீய பிரஜைகளை இலங்கை கடற்படை மீட்டது

Post  meenu Sat Mar 02, 2013 12:17 pm

இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் கடல் பிரதேசத்தில் மீன்பிடி படகொன்றில் தத்தளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 138 ஆசிய நாட்டவர்கள் இலங்கை கடற்படையினரால் சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளார்கள்.

மீட்கப்பட்டவர்களில் 127 பேர் வங்கதேசத்தையும் ஏனைய 11 பேர் பர்மாவையும் சேர்ந்தவர்கள். இவர்களில் பெண்கள் மூவரும் சிறார் மூவரும் அடங்குவர்.

வங்கதேசப் பிரஜையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் கூறுகின்றனர்.

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவுக்கான பயணத்தை இவர்கள் மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறை மற்றும் கடற்படை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

மரத்தினால் செய்யப்பட்டுள்ள இந்த படகில் பயணம் செய்தவர்கள் கடந்த 10 நாட்களாக ஒலுவில் கடலில் 50 மைல்களுக்கு அப்பால் தத்தளித்துக் கொண்டிருந்த வேளை, மீன்பிடி மற்றும் நீரியல் துறை ஊடாக மீனவர்களிடமிருந்து கிடைத்த தகவலொன்றின் பேரில் அங்கு விரைந்த கடற்படையினரால் குறித்த நபர்கள் காப்பற்றப்பட்டு ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்ததாக கடற்படை தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
உடல்நலம் பாதிக்கபப்ட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது

உடல்நலம் பாதிக்கபப்ட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது

தொடர்ந்து சில நாட்களாக உணவின்றி சோர்வும் மயக்கமும் அடைந்த நிலையில் இவர்கள் காணப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் சிலர் அக்கரைப்பற்று அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பிட்ட சட்ட விரோத பயணிகள் படகு கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி வங்கதேசத்திலிருந்து புறப்பட்டு 28ஆம் திகதி பர்மாவிலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளதாகஇவர்களை விசாரித்தபோது மொழிபெயர்ப்புக்கு உதவிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் சுலைமாலெப்பை முனாஸ் தெரிவிக்கின்றார்.

தாய்லாந்து ஊடாக பயணித்த வேலை அந்நாட்டு கடற்படையினரால் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டு இவர்களது உடமைகள் பறிக்கப்பட்டதாக அவர்கள் கூறியிருப்பதாக சுலைமாலெப்பை முனாஸ் தெரிவித்தார்.

பிழைப்பு தேடி மலேசியாவுக்கு செல்வதற்காக இப்படகில் சென்றதாய் வங்கதேச பிரஜைகள் கூறியதாகவும், தமது நாட்டில் வாழ முடியாத சூழலில் இந்த பயணத்தை நாடியதாக பர்மீய பிரஜைகள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum