தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த நவீன கருவி

Go down

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த நவீன கருவி Empty சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த நவீன கருவி

Post  meenu Wed Feb 27, 2013 2:10 pm

இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள நவீன கருவிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் நாள் முழுவதும் விரலை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை இல்லை என்று தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

டைப் 1 வகை சர்க்கரை நோயைக் கொண்டிருப்பவர்கள் தங்களது இரத்தத்தில் குளுகோஸ் அளவை அறிந்து கொள்வதற்கு இதுபோன்ற நவீன சாதனங்களைப் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

ரோமில் நடைபேற்ற சர்க்கரை நோய் குறித்த ஐரோப்பிய ஆய்வுக்குழுவின் ஆண்டுக் கூட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இரத்த சர்க்கரையைத் தீவிரமாக கட்டுப்படுத்துவதன் மூலம் இந்நோயினால் ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க பாதிப்பான பார்வையிழப்பு, சிறுநீரகப் பாதிப்பு, இதய நோய் போன்ற பாதிப்புகளில் இருந்து மீளலாம்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் உலக அளவில் 7 விழுக்காடு மக்கள் பாரம்பரிய முறைகளையே கடைபிடிப்பதாக தெரிய வந்துள்ளது.

சுமார் 322 பேரிடம் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்குமாறு அறிவுறுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum