தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ தேனு புரீஸ்வரர் மாடம்பாக்கம்

Go down

ஸ்ரீ தேனு புரீஸ்வரர் மாடம்பாக்கம் Empty ஸ்ரீ தேனு புரீஸ்வரர் மாடம்பாக்கம்

Post  amma Mon Jan 14, 2013 3:29 pm



ஸ்தல வரலாறு:

ஸ்ரீதேனுகாம்பாள் சமேத ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் ஆலயம் தாம்பரம்- வேளச்சேரி சாலையில் ராஜகீழ்ப்பாக்கம் என்ற இடத்திலிருந்து தெற்கே உள்ளே சென்றால் மாடப்பாக்கம் என்ற இடத்தில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் மந்தையில் இருந்து வந்த பசு ஒன்று தினமும் ஒரிடத்தில் பாலினை சொரிந்து விட்டு காய்ந்த மடியுடன் திரும்பும். ஒரு நாள் இடையன் அப்பசுவின் மடிக்காம்பினை அடித்தான்.

பால் கீழே விழுந்த இடத்தில் அழகான தொரு லிங்கம் தோன்றியது. பசுவின் காம்பில் அடிபட்ட இடத்தில் ரத்தம் வழிந்தது. வலி தாங்காமல் பசு ஒட முயலும் போது காலின் குழம்பு லிங்கத்தில் பதிந்தது. அதே சமயம் பசு, கபில மகரிஷியாக தோன்றி சுயம்பு லிங்கத்தை வணங்கினார்.

யாதவ இடையனும் தன் செயலை நினைத்து வருந்தி ஈசனை வணங்கினார். பசுவின் பால் தினமும் சொரிந்து மகிழ்ந்து சுயம்புவாக தோன்றிய ஈசுவரன் தேனு புரீஸ்வரர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். பன்னிரெண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் குலோத்துங்க சோழன் என்ற மன்னன் தன் கனவில் ஈசன் தோன்றிய சம்பவத்தைக் கண்டு களித்தான்.

பிறகு இங்கு திருக்கோவில் கட்ட மானியங்கள் பல தந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. இந்த ஆலய தூண்களில் ஒன்றில் சரபேஸ்வரர் ( அருகில் நாராயணர் நரசிம்மராக) இரு கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்திக் கொண்டும் மற்ற இரண்டு கரங்கள் கூப்பிய நிலையில் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

இங்கு ஒவ்வொரு வாரம் ஞாயிறன்று மாலை 4.30-6 மணியான ராகு காலத்தில் சரபேஸ்வரருக்கு பால் அபிஷேகம் ஆராதனை நடை பெறுகிறது. தொடர்ந்து ஆறுவாரம் வந்தால் வேண்டியது அனைத்தும் அருள்வார் சரபர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் வேளச்சேரி சென்று பின் அங்கிருந்து பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  அட்சய புரீஸ்வரர் கோவில்
» ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை
»  ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை
» ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் தமிழ் பாடல்கள் - ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை விளக்க உரை
» ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்(தமிழ்ப் பாடல்கள்) ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை(விளக்க உரை)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum