தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்டஃப்டு வெண்டைக்காய்

Go down

ஸ்டஃப்டு வெண்டைக்காய் Empty ஸ்டஃப்டு வெண்டைக்காய்

Post  ishwarya Thu Feb 21, 2013 12:29 pm

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் – 1/2 கிலோ
எண்ணெய் – 2 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி- மேலே தூவ
கடலை மாவு – 2 தே.கரண்டி
சாம்பார் பொடி(அ) ரசப்பொடி – 2 தே.கரண்டி
எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி
உப்பு – 1/2 தே.கரண்டி



எப்படிச் செய்வது?

* வெண்டைகாயினை கழுவி கொள்ளவும். வெண்டைக்காயின் காம்பினை வெட்டவும். அதன் நடுவில் சிறிதாக கீறிவிடவும்.(இதில் தான் ஸ்டஃப்பிங் வைக்கபோகிறோம்.)

* ஸ்டஃப்பிங் பொருட்களை அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.(ஸ்டஃப்பிங் கொழுக்கட்டை பிடிப்பது போல வர வேண்டும் . இல்லையெனில் 1 – 2 தே.கரண்டி தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.) ஸ்டஃப்பிங்கை வெண்டைக்காயின் நடுவில் அடக்கி வைக்கவும்.

* பெரிய நாண்-ஸ்டிக் பனில் ஸ்டஃப்பிங் செய்த வெண்டைக்காயினை ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கவும்.

வெண்டைக்காயின் மீது எண்ணெய் ஊற்றி தட்டு போட்டு மூடி சிறிய தீயில் வேகவிடவும்.

4 - 5 நிமிடம் கழித்து வெண்டைக்காயினை திருப்பிவிட்டு அதன் மீது 2 தே.கரண்டி தண்ணீரினை தெளித்துவிடவும்.

* 5 நிமிடத்திற்கு ஒரு முறை வெண்டைக்காயினை திருப்பிவிட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும். கடைசியில் வெண்டைக்காய் வறுவல் மாதிரி வரும் வரை வைத்து பொடியாக வெட்டி வைத்துள்ள கொத்தமல்லியினை தூவவும்.

* சுவையான ஸ்டஃப்டு வெண்டைக்காய் ரெடி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum