தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காலிஃபிளவர் வறுவல்

Go down

காலிஃபிளவர் வறுவல்  Empty காலிஃபிளவர் வறுவல்

Post  ishwarya Wed Feb 20, 2013 12:30 pm

என்னென்ன தேவை?
காலிஃபிளவர் (பெரிதாக) - 1,
கடலை மாவு - அரை கப்,
மைதா - கால் கப்,
கார்ன் ஃப்ளார் -கால் கப்,
அரிசி மாவு - கால் கப்,
இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
அஜினோமோட்டோ - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
விருப்பப்பட்டால் ஆரஞ்சு,
சிவப்பு கலர் - சிறிது.


எப்படிச் செய்வது?

எல்லா மாவு வகைகளையும் ஒன்றாகக் கலக்கவும். காலிஃபிளவரை சிறிய துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் 1 நிமிடம் போட்டு எடுத்து, ஈரமின்றி துடைத்து ஒரு தட்டில் பரத்தி வைக்கவும். அதன் மேல் எல்லா வகையான மாவுகளையும் தூவவும். இஞ்சி-பூண்டு விழுது,
அஜினோமோட்டோ, மிளகாய் தூள், உப்பு, கலர் எல்லாம் சேர்த்து, தண்ணீரை லேசாகத் தெளித்துப் பிசறவும். இதற்கு முன் கடாயில் எண்ணெயைக் காய வைத்துத் தயாராக வைக்கவும். காலிஃபிளவர் துண்டுகளை அதில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum