தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புறமுதுகு காட்டும் நந்திகள்

Go down

புறமுதுகு காட்டும் நந்திகள் Empty புறமுதுகு காட்டும் நந்திகள்

Post  amma Mon Jan 14, 2013 1:21 pm


வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருவல்லம் திருத்தலத்தில் இறைவன் வில்வநாதேஸ்வரர், இறைவி தனுமத்யாம்பாள் அருள் புரிகிறார்கள். இங்குள்ள நந்திசுவாமியை நோக்கி இல்லாமல் நின்ற நிலையில் புறமுதுகு காட்டி காட்சிதருகிறார். இதற்குக் காரணம், ஒருமுறை கோவில் குருக்கள் சுவாமிக்குஅபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரும்போது கஞ்சன் என்ற அரக்கன் இடைïறுசெய்தான்.

குருக்கள், சுவாமியிடம் முறையிட, சுவாமி நந்தியைப் பார்த்துகஞ்சனைக் கவனிக்கும்படி சொன்னார். நந்தியிடம் அடிபட்ட கஞ்சன், ''இனிமேல் குருக்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்துகொடுத்துவிட்டு உயிர் தப்பினான். இருந்தாலும் அவன் மீண்டும் தொந்தரவுகொடுக்காமலிருக்க கோவிலின் வாயிலை நோக்கிய வண்ணம் இறைவனுக்கு புறமுதுகுகாட்டிய நிலையில் நந்தி உள்ளார்.

கும்பகோணம் அருகில் திருவைகாவூர் திருத்தலம் உள்ளது. இத்தலம் சிவராத்திரித் தலமாகக் கருதப்படு கிறது. இத்தல இறைவன் வில்வவனேஸ்வரர்; அம்பாள் சர்வஜனரட்சகி. சிவ பக்தனான வேடன் ஒருவன் கோவிலுக்குள் ஈசனைவணங்கிக் கொண்டி ருக்கும்போது, அவன் உயிரைப் பறிக்க யமன் வந்தான்.

சிவாலயத்திற் குள் எமன் நுழைவதைக் கண்ட நந்தியும் துவார பாலகர்களும்தடுக்க, எமன் திரும்பிச் சென்று விட்டான். மீண்டும் எமன் கோவிலுக்குள் வராமல் தடுக்க நந்தியெம்பெருமான் இங்கு வாயிலை நோக்கி உள்ளார். விருத்தாசலத்திற்கு மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெண்ணாடகம். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சுவாமி சுடர் கொழுந்தீசர்;

அம்பாள் கடந்தை நாயகி. ஒரு சமயம் பெண்ணாடகத்தில் கடும் மழை தொடர்ந்துபெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர்மக்கள் இறைவனை வேண்டவே,இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும் படிஆணையிட்டார். உடனே நந்தி பெருமான் கிழக்குப் பக்கமாகத் திரும்பிமழையால் ஏற்பட்ட வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார்.

அன்றிலிருந்து நந்தி சிவபெருமானுக்கு புறமுதுகு காட்டிக் கொண்டு வாசலைநோக்கி உள்ளார். சென்னைக்கு அருகில் உள்ள வடதிருமுல்லை வாயில் திருத்தலத்தின் இறைவன் மாசிலா மணீஸ்வரர்; இறைவி கொடியிடை நாயகி. இத்தலத்தினை ஆட்சி புரிந்துவந்த தொண்டைமான் சிவபக்தன்.

இந்த மன்னனை அழிக்கஅரக்கர்கள் படையெடுத்து வரவே, மன்னன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவன் நந்தி பெருமானை அனுப்பினார். நந்தி, அரக்கர்களை ஓட ஓட விரட்டி அடித்தார். அரக்கர்கள் மீண்டும் திரும்பிவராமலிருக்க போருக்கு ஆயத்தமான நிலையில் வாயிலை நோக்கிய வண்ணம் நந்திகாட்சி தருகிறார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum