தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“நெஞ்சே உன்னாசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன?”

Go down

“நெஞ்சே உன்னாசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன?”  Empty “நெஞ்சே உன்னாசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன?”

Post  ishwarya Mon Feb 18, 2013 2:21 pm

எந்த வித உடல் குறைப்படும் இல்லாமல் இந்த உலகத்தில் பிறந்து அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் அமையப் பெற்றவர்களே இந்த உலகில் எதையும் சாதிப்பதில்லை. “நானும் பிறந்தேன்.. வளர்ந்தேன்” என்று வாழ்நாளை கழித்துவிட்டு பூமிக்கு பாரமாய் இருந்துவிட்டு மறைந்துபோகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், பிறவியிலிருந்தே இரு கண்களும் பார்வையற்று, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தனது விடா முயற்சியால் 1 to 10 வது, அதற்கு பின்னர் ரெகுலர் சிலபஸில் +1, +2 பின்னர் கல்லூரியில் B.A., M.A., பின்னர் சென்னை பலகலைக்கழகத்தில் M.Phil என கல்வி பயின்று, பட்டங்கள் பெற்று, இசை, பாட்டு, பின்னணி குரல், ஆளுமைப் பயிற்சி, என பல்துறைகளில் தேர்ச்சி பெற்று இன்று ACE PANACEA SOFT SKILLS PVT. LTD. என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக (CHIEF MANAGING DIRECTOR) இருக்கிறார் 37 வயது நிரம்பிய இந்த நிஜ ஹீரோ இளங்கோ.

தன்னம்பிக்கை நாயகன்!

நமது தளத்தின் பேட்டிக்காக இந்த தன்னம்பிக்கை நாயகனை நானும் நண்பர் விஜய் ஆனந்தும் அவரது அடையார் அலுவலகத்தில் சந்தித்தோம். நாம் சென்றபோது அவர் ஒரு TRAINING SESSIONல் இருந்தார். ஆகவே சிறிது நேரம் காத்திருந்தோம். காத்திருந்த நொடிகளில் அவரது அலுவலக வரவேற்பறையை புகைப்படமெடுத்தோம். அந்த இடம் முழுக்க ஒரு வித பாசிட்டிவ் வைப்ரேஷன் பரவியிருப்பதை உணரமுடிந்தது.

ஒரு சின்ன டெஸ்ட் – எனக்கு!

அவரது செக்ரட்டரியுடன் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்துவிட்டார் இளங்கோ. எழுந்து நின்று அவருக்கு கைகொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டோம். யாரிடமாவது கைகுலுக்கினால் கைகளை சும்மா கடமைக்கே என்று இல்லாமல் இறுக்கமாக பிடித்து கைகுலுக்கவேண்டும். அதை வைத்து தான் முக்கியஸ்தர்கள் நம்மை பற்றி ஒரு முதல் மதிப்பீட்டிற்கு வருவார்கள். இது எனக்கு தெரியுமென்பதால் நான் கெட்டியாக கைகுலுக்க, அவர் அதை விட கெட்டியாக என் கைகளை பிடித்து குலுக்கினார்! (எப்பூடி…!!)

எங்கள் உரையாடல் பேட்டி போலல்லாமல் மிக மிக ஃபார்மலாக அமைந்தது. வாழ்க்கையில் இவர் சந்தித்த சவால்கள், அதை இவர் எதிர்கொண்ட விதம், கடந்து வந்த பாதை, இவரது PASSION ஆதங்கம் உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி மனம் விட்டு பேசினோம். சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றியும் அவரது படப் பாடல்கள் பற்றியும் இவர் அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். “நெஞ்சே உன் ஆசை என்ன?” பாடல் பற்றி இவர் சொன்ன ஒரு தகவல் நம்மில் பலருக்கு தெரியாது. ஒவ்வொரு பாடலைப் பற்றியும் எங்களது பேச்சு திரும்பும்போது அந்தந்த பாடலை சில வரிகள் பாடிக்காட்டினார். இவர் ஒரு சிறந்த பாடகரும் கூட என்பதால் கேட்பதற்கு இனிமையாக இருந்தது.

நாங்கள் இதுவரை சந்தித்த பிரபலங்களில் முதன்மையானவராக உங்களை தான் கருதுகிறோம்” என்று கூறி வாங்கி சென்ற பொக்கேவை அவருக்கு கொடுத்தோம். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். மறக்காது “நன்றி…. நன்றி” என்று கூறினார்.

எங்கிருந்து வருகிறோம், எங்கு வேலை பார்க்கிறோம் என்பது உள்ளிட்ட பொதுவான விஷயங்களை கேட்டறிந்தார். நமது தளத்தை பற்றியும் அதன் செயல்பாடு மற்றும் நோக்கம் ஆகியவற்றை பற்றியும் சுருக்கமாக அவருக்கு கூறினேன். பொறுமையாக அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.

நமது தளம் சார்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து கூறினேன். ஆச்சரியப்பட்ட அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக அவரை ஒரு புத்தகம் எழுதித் தருமாறு அணுகியிருக்கிறார்கள் என்ற செய்தியை கூறினார். வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.

நானும் நண்பர் விஜய் ஆனந்தும் எப்படி ஒருவருக்கொருவர் அறிமுகமானோம் என்று கேட்டார். “BIRDS OF A FEATHER FLOCK TOGETHER” என்ற வாக்கியத்திற்க்கேற்ப, ஒரே சிந்தனை ஒரே குறிக்கோள் என்ற அடிப்படையில் எங்கள் நட்பு ஏற்பட்டதாக கூறினேன். ஆமோதிப்பது போல பலமாக சிரித்தார்.

80 களின் ரஜினி திரைப்படங்களுக்கு தான் ஒரு மிகப் பெரிய விசிறி என்று குறிப்பிட்ட திரு.இளங்கோ, ரஜினியின் கிளாஸ் படங்களின் மிகப் பெரிய விசிறி என்பது புரிந்தது.

(திரு.இளங்கோ சிறு வயதில் சூப்பர் ஸ்டாரை சந்தித்த அனுபவத்தை கூறியிருக்கிறார். புகைப்படத்தை இணைத்திருக்கிறேன். மறக்காமல் படிக்கவும் & ரசிக்கவும்.)

நாம் : “தீவிர உரையாடலுக்குள் நாம் நுழைவதற்கு முன்பு, உங்களை பற்றி நான் தெரிந்து கொண்டது எப்படி என்று கூறுகிறேன் சார்”

திரு. இளங்கோ : “ஓ… முதல்ல அதை சொல்லுங்க” என்றார் ஆர்வமாக!

நாம் : “WWW.LIVINGEXTRA.COM என்ற ஒரு வெப்சைட் மூலம் உங்களைப் பற்றி தெரிந்துகொண்டேன். IT’S A WONDERFUL, USEFUL & MOTIVATIONAL WEBSITE. அந்த வெப்சைட்டின் தீவிர விசிறி நான். முழுக்க முழுக்க ஆன்மீகம் மற்றும் சுயமுன்னேற்ற கருத்துக்கள், கட்டுரைகள் என பாசிட்டிவான விஷயங்கள் இடம்பெறும் ஒரு தளம் அது. அந்த தளத்தில் இடம்பெற்ற ஒரு கட்டுரை மூலம் உங்களைப் பற்றி தெரிந்துகொண்டேன் சார்!”

திரு. இளங்கோ : “ஓ… கிரேட்…. கிரேட்…” என்றார் மகிழ்ச்சி ததும்ப!

நாம் : “உங்களை பத்தி என்னோட ரீடர்ஸுக்கு நீங்களே கொஞ்சம் சொல்லுங்க சார்….”
உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதன் – நான் தான்!

திரு. இளங்கோ : “மகிழ் மகிழ்வி என்பதையே தாரக மந்திரமாக வைத்து, மக்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கவேண்டும் என்பதை ஒரு இலக்காக வைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் சாதாரண மனிதன் நான். உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதன் யாரென்று கேட்டால் அது நான் தான். அந்த எண்ணம் எப்போதும் என் ரத்த நாளங்களில் ஊடுருவி பின்னிப் பிணைந்து வழி நடத்துகிறது. அந்த எண்ணத்தை நான் பேசுபவர்களிடமும் மாற்ற முடிகிறது என்பது தான் எனது பலம். திறமை.”

300 பயிற்சியாளர்கள் & ஊழியர்களின் ஊதியத்துக்கு பொறுப்பு

“என்னுடைய தொழில் என்று சொன்னால், ACE PANACEA SOFT SKILLS PVT. LTD. என்ற நிறுவனத்தின் தலைவர். இங்குள்ள 300 பயிற்சியாளர்கள் & ஊழியர்களின் ஊதியத்துக்கு நான் பொறுப்பு. தவிர 50 இசைக்கலைஞர்கள் – அவர்களுக்கான நிகழ்ச்சிகளையும் ஊதியத்தையும் ஏற்பாடு செய்து தரவேண்டிய பொறுப்பு, மற்றும் பல்வேறு விளம்பரப் படங்கள் மற்றும் அது சம்பந்தமான பணிகளை பல்வேறு பணியாளர்களுக்கு ஏற்படுத்தி தருவதும் எனது பொறுப்பு.

அதாவது பயிற்சி, இசை, மற்றும் விளம்பரப் படங்கள் ஆகிய மூன்றும் தான் எனது தொழில். பயிற்சி என்று சொன்னால், நிறுவனங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கவேண்டிய பணி. என்ன பயிற்சி? TECHNICAL SKILLS அதாவது துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுவது மட்டுமின்றி, ஆளுமை திறன் குறித்தும் பயிற்சியளிப்பது.

அதாவது இன்றைய சராசரி மாணவனும், மாணவியும் மிகுந்த அறிவு படைத்தவர்களாக இருக்கிறார்கள். அதாவது அவர்களது துறை சார்ந்த அளவில். ஆனால் அவர்களுக்கு COMMUNICATION SKILLS, SELF-CONFIDENCE, SELF-EVALUATION, ATTITUDE போன்றவை தெரிவதில்லை. இப்படி அன்றாட வாழ்க்கையில் நமக்கு தேவையான மேற்க்கூறிய SKILLS ஐ சரியாக கையாள்வது உள்ளிட்ட பல விஷயங்களை குறித்து மாணவர்களுக்கும் கார்பரேட் ஊழியர்களுக்கும் பயிற்சியளிக்கிறோம்.

இது தவிர நாம் அன்றாட வாழ்க்கையில் இருக்கக்கூடிய பணம். அந்த பணத்தை எப்படி மேலாண்மை செய்வது? MONEY MANAGEMENT என்று சொல்லக்கூடிய திறன். அதாவது நம்மிடம் இருக்கக் கூடிய பணத்தை எப்படி செலவு செய்வது என்பது குறித்த பயிற்சி. அப்புறம் CRISIS MANAGEMENT. சிக்கல்கள் வரும்போது அதை எதிர்கொள்ளக்கூடிய பயிற்சி. அதாவது சொல்லிக்கொண்டு வராத சிக்கல்கள். எதிர்பாராமல் வரக்கூடிய சிக்கல்கள்.

‘உணர்வுகளை புத்திசாலித்தனமாக கையாள்வது எப்படி?’ என்பது குறித்து கார்பரேட் நிறுவனங்களில் அனைத்து பிரிவினருக்கும் பயிற்சியளிக்கிறோம். அதாவது டாப் லெவல் மானேஜ்மென்ட் முதல் எண்டரி லெவல் வரை அனைவருக்கும் பயிற்சியளிக்கிறோம். இதில் முக்கியமாக EMOTIONAL INTELLIGENCE குறித்து பயிற்சியளிக்கிறோம். அதாவது உணர்வுகளை புத்திசாலித்தனமாக கையாள்வது எப்படி என்பது குறித்த பயிற்சி.

நாம் : “இன்னைக்கு எல்லோருக்கும் தேவைப்படுற ஒன்னு சார் அது” என்றோம் இடைமறித்து.

திரு. இளங்கோ : “அதாவது உணர்வுகளை புத்திசாலிதனமாக கையாள்வது என்பது வேறு. கட்டுபடுத்துவது என்பது வேறு”

நாம் : “ரெண்டுக்கும் என்ன சார் DIFFERENCE ?”

திரு. இளங்கோ : “கட்டுப்படுத்துவது என்பது எப்போதுமே வெற்றி பெறாது. IT WILL ALWAYS GO IN VAIN. இந்தப் பக்கம் அமுக்கி வெச்சா அந்தப் பக்கம் அது வெடிச்சிட்டு போயிடும். பந்தை தண்ணீரில் அமுக்கி வைப்பது போலத் தான் அது. ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’னு சொல்வாங்களே… அப்படி… உங்காளு படத்துல கூட அப்படி ஒரு வரி வருதே…”
உன்னை யாரும் ஓரங்கட்டித் தான் வெச்சாலும் தம்பி வாடா பந்து போலத் தான்!

நாம் : “யெஸ் சார்! சந்திரமுகியில ‘தேவுடா தேவுடா’ பாட்டுல வரும். பூப்பந்தை யாரும் நீரில் பொத்தி தான் வெச்சாலும் பந்து வரும் தண்ணி மேல தான். உன்னை யாரும் ஓரங்கட்டித் தான் வெச்சாலும் தம்பி வாடா பந்து போலத் தான்!”

திரு. இளங்கோ : “ஆம்…. கரெக்ட்…. எதுக்கு அதை சொன்னேன்னா… அந்த மாதிரி உணர்வுகளை கட்டுப்படுத்தும்போது, அமுக்கி வைக்கும்போது, suppressed emotions take a very bad shape…… in an ugly form. ஆனால் கையாள்வது என்பது observing it and then exercising your sense of not control but your rule over it. இந்த EMOTIONAL MANAGEMENT குறித்து நாங்கள் எங்கள் நிறுவனத்தில் பயிற்சி அளிக்கிறோம்.

இந்த EMOTIONAL MANAGEMENT பயிற்சி பெற்றால் என்ன கிடைக்கும் என்றால், ஒரு சுமூகமான சூழல் ஏற்பட்டு பாதிக்கும் மேல் பிரச்னைகள் தீர்ந்துவிடும். தவறு நடந்தால் தவறைத் தான் பார்ப்பார்களே தவிர தவறு செய்தவர்களை அல்ல. So, அல்டிமேட்டாக இதன் மூலம் உற்பத்தி திறன் அதகரிக்கும்.

வாழ்க்கை இரண்டு வகை — உணர்வுப் பூர்வமான வாழ்க்கை & அறிவுப் பூர்வமான வாழ்க்கை. அதாவது உணர்வுப் பூர்வமான வாழ்க்கையை தான் நம்மில் 80% வாழ்கிறோம். அறிவுப் பூர்வமான வாழ்க்கையை அல்ல. நமக்கு பிடிச்சது செய்யனும். ஓகே. ஆனால் பிடிச்சதெல்லாம் செய்யக்கூடாது. WE SHOULD HAVE A CHECK OVER OUR DESIRES AND WISHES.

சின்ன வயசுல இருந்தே இன்றைய இளைஞர்களுக்கு சொல்லவேண்டிய விஷயம் என்னன்னா… நமக்கெல்லாம் ATTITUDE KNOWLEDGE SKILLS இது மூனும் வேணும் என்பது தான். ASK அப்படின்னு ஷார்ட் ஃபார்ம்ல வெச்சிக்கலாம். நாம இப்போ அதிகமா கான்சண்ட்ரேட் பண்றது KNOWLEDGE ல மட்டும் தான். SKILLS குறித்து குறைவா தான் கவனம் செலுத்துறோம். ATTITUDE பத்தி யாருமே கவலைப்படுறதே இல்லே.

“எஸ்… சார்… இப்போ ஸ்டூடண்ட்ஸ் எல்லாருக்கும் நல்லா படிக்கணும்… நல்ல மார்க் எடுக்கணும்… நல்ல வேலைல சேரனும்… இது தான் குறிக்கோளா இருக்கு. நம்ம கிட்டே இருக்குற குறைகள் என்ன? நம்ம அணுகுமுறைகள்ல ஏதாவது தப்பு இருக்கா? நாம MORAL ETHICS படி வாழறோமா? நம்மை சுத்தி என்ன நடக்குது, நாடு எங்கே போகுது? ETC. ETC., இதைப் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்கிற ஆர்வம் சுத்தமா இல்லே.”

திரு. இளங்கோ : “சுந்தர்… ஒரு சின்ன கரெக்ஷன்… நல்ல படிக்கணும்… நிறையா சம்பாதிக்கணும்… குறைவா வேலை செய்யனும்…. இது தான் இப்போ எல்லோரோட டார்கெட்”

(அனைவரும் சிரிக்கிறோம்)

(மீண்டும் தொடர்கிறார் இளங்கோ)

திரு. இளங்கோ : “சரி… நாம பேசிகிட்டிருந்த விஷயத்துக்கு வருவோம்… நம்மோட கல்வி மற்றும் சமுதாய முறையிலேயே யாரை மதிக்கணும்னு சொல்லித் தர்றாங்கன்ன – நல்லா படிக்கிறவன, நல்லா சம்பாதிக்கிறவன் இவனை தான் மதிக்கச் சொல்லி கற்று தர்றாங்க… மத்ததுக்கு மதிப்பு கிடையாது. இந்தப் பையன் ரொம்ப நல்ல பையன் அப்படின்னு சொல்லி மதிக்க கற்று தர்றது ஸ்கூல்லயோ காலேஜ்லயோ ரொம்ப ரொம்ப அபூர்வம்.”

எனவே இன்றைய மாணவர்களுக்கும் நிறுவன ஊழியர்களுக்கும் தேவையான மனவள பயிற்சிகளை அளிப்பது தான் எனது பணி. எனது நிறுவனத்தின் பணி.
சாதனையாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகை சவாலை சந்தித்து தான் மேலே எழுகிறார்கள்

நாம் : நீங்கள் செய்திருக்கும் சாதனை – பார்வையற்ற நிலையிலும் இன்று நீங்கள் அடைந்திருக்கும் இந்த உயரம் – பார்வை அமையப் பெற்ற ஏன் எல்லா வசதிகளும் அமையப்பெற்ற நபர்கள் கூட செய்வது அரிது. அப்படியிருக்கும் சூழ்நிலையில், உங்களை இந்த சாதனைப் பயணத்திற்கு தூண்டியது எது? நிச்சயம் இதற்க்கு பின்னணியில் ஏதேனும் சம்பவம் இருக்கும். அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

திரு. இளங்கோ : (சிறிது நேரம் யோசிக்கிறார்)…. நான் என்ன நினைக்கிறேன்னா… நான் மட்டுமில்லே… சாதனையாளர்கள் அநேகம் பேர் அதாவது கிட்டத்தட்ட 98% பேர் ஏதாவது ஒரு வகையில், ஒரு சவாலை சந்திச்சி தான் மேலே வர்றாங்க. BORN WITH SILVER SPOON ன்னு சொல்வாங்கே அது போல, எல்லா வசதிகளும் நிரம்பியிருந்து, எந்த வித உடல் குறைப்பாடும் இல்லாம இருந்து சாதிச்சவங்கன்னு பார்த்தா மிக மிகச் சிலர் தான். நல்ல குடும்பத்துல இருந்து வந்து எந்த சிக்கலும் இல்லாம, எந்த பிரச்னையும் இல்லாம சாதிச்சவங்க ரொம்ப ரொம்ப ரேர். காரணம், எல்லாம் சரியா இருக்கும்போது உங்க மூளை மந்தமாயிடும். பிரச்சனைகள் இருக்கும்போது தான் உங்க ப்ரெயின் நல்ல வேலை செய்யும்.

(இதை தாங்க தலைவர் எஸ்.ரா.வோட பாராட்டு விழாவுல சொன்னாரு. ஞாபகம் இருக்கா?)

உதாரணத்துக்கு தமிழ் மீதியத்துல படிச்சவங்களுக்கு இங்க்லீஷ்ல நல்லா பேசுறதுக்கு வாய்ப்பிருக்கு.

நாம் : கரெக்ட் சார்…. அப்துல் கலாம்லே இருந்து நிறைய சாதனையாளர்கள் தமிழ் மீடியம்ல படிச்சவங்க தான். துரதிஷ்டவசமா நான் இங்க்லீஷ் மீடியம் சார்…

திரு. இளங்கோ : நான் வந்து இங்க்லீஷ் மீடியம்…. கிடையாது. தமிழ் மீடியம் தான். பத்தாம் வகுப்பு வரைக்கும் தமிழ் மீடியம் தான்.

திரு. இளங்கோ : அதுக்காக தமிழ் மீடியத்துல படிச்சவங்க எல்லாரும் நல்லா இங்க்லீஷ்ல பேசுவாங்கன்னு சொல்ல முடியாது. தமிழ் மீடியத்துல படிச்சவங்களுக்கு அதுக்கான உத்வேகம் நிறையா இருக்கும். உதாரணத்துக்கு கால் கொஞ்சம் அடிபட்டிருக்கும்போது தான் நல்லா ஒடனும்னு தோணும். அது போலத் தான் இதுவும்.

நாம் : கரெக்ட் சார். உடம்பு நல்லாயிருக்கும்போது உடம்பை ஃபிட்டா வெச்சிகிறது பத்தி யோசிச்சதே கிடையாது நான். நடுவுல கொஞ்சம் நாள் உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல இருந்தேன். அப்போ தான் உடம்பை நல்லா பார்த்துக்கனும்கிற ஞானோதயமே வந்துச்சு.

திரு. இளங்கோ : ஸ்கூல் டு காலேஜ் அப்புறம் காலேஜ் டு கேரியர் அப்புறம் கேரியர் டு இப்போ இருக்குற நிலைமை. மொத்தம் மூணு ஸ்டேஜ்.

ஸ்கூல் டு காலேஜ்ல என்ன சவால்னா தமிழ் மீடியம் என்பது சவாலா இருந்தது. இருந்தாலும் அக்கவுண்டன்ஸியிலும் காமர்ஸிலும் 200/200 ஸ்கோர் பண்ணினேன். 10 ஆம் வகுப்புல மாவட்ட அளவுல முதல்ல வந்தேன். இதெல்லாம் தமிழ் மீடியத்துல படிக்கும்போது தான் சாதிச்சது. ஸ்கூல்ல நடக்கும் பேச்சுப் போட்டி உள்ளிட்ட ஆங்கிலத்துல நடக்குற போட்டிகள் அனைத்திலும் கலந்துக்குவேன். அதுல பரிசு வாங்குறேனோ இல்லையோ கட்டாயம் கலந்துக்குவேன். பல சமயம் ஆறுதல் பரிசு கூட வாங்காம தோத்திருக்கேன். பல முறை மனப்பாடம் பண்ணிட்டு போய் ஸ்டேஜ்ல நிக்கும்போது மறந்து போய், முதல் நாலு வரியோடு பரிதாபமா பேச்சை முடிச்ச சந்தர்ப்பங்கள் எல்லாம் உண்டு. அதையெல்லாம் தாண்டி தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கேன்.

நாம் : அப்போ எப்படித் தான் எப்போத் தான் இது சாத்தியமாச்சு?

திரு.இளங்கோ : அடுத்தடுத்த முயற்சிகள்ல தான். ஒரு செயல் சரியா வரலியா… அதை திரும்ப செய்ங்க. அப்போவும் வரலியா திரும்ப திரும்ப செய்ங்க. அதுக்கப்புறமும் வரலியா திரும்ப திரும்ப திரும்ப செய்ங்க. இப்படி உங்களுக்கு அது சாத்தியமாகுற வரைக்கும் செய்ங்க. இது தான் என்னோட ATTITUDE. சின்ன வயசுல இருந்தே நான் ஒரு திங்கிங் HUMAN BEING. யாராவது ஏதாவது சொல்லிட்டாங்கன்னா.. அதாவது திட்டிடாங்கன்னா… உக்காந்து யோசிப்பேன். ஏன் இப்படி சொன்னங்க… நாம என்ன தப்பு பண்ணினோம்…நாம ஏன் அழுவனும்? நாம் அழக்கூடாது…. அப்படின்னு யோசிப்பேன். தவிர என்னோட அப்பா அம்மா படிக்காதவங்க என்பது…. எனக்கு மிகப் பெரிய…. (மௌனம்)

நாம் : மைனஸ் பாயின்ட்…?

திரு.இளங்கோ : இல்லே…. மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்.

(இப்படித்தான் சந்திப்பு முழுக்க ஒரே twist வெச்சு பேசினார் இவர். பல இடங்கள்ல நான் வழிஞ்சது தான் மிச்சம்!)

திரு. இளங்கோ : படிச்சவங்களா இருந்திருந்தாங்கன்னா அவங்களோட விருப்பத்தை என் மேல திணிச்சி என் எதிர்காலத்தை ஸ்பாயில் பண்ணியிருப்பாங்க…. படிக்காதவங்க என்பதால் என்னை சுதந்திரமா விட்டாங்க.

அப்புறம் காலேஜ் லைஃப். லயோலா காலேஜ். அது ஒரு மிகப் பெரிய உலகம். இங்கிலீஷ்ல மட்டும் தான் பேசுவோம் அப்படின்னு சொல்ற ஸ்டூடண்ட்ஸ் ஒரு வகை. இங்க்லீஷ்ல பேசத் தெரியலேன்னாலும் பேசாம வாயை மூடிகிட்டு இருப்போம் அப்படின்னு நினைக்கிற ஸ்டூடண்ட்ஸ் ஒரு வகை. படிக்காம எப்போ பார்த்தாலும் காண்டீன், சினிமா, பார்க், பீச்னு சுத்துக்கிட்டு இருக்குற ஸ்டூடண்ட்ஸ் ஒரு வகை. மூணு விதமான க்ரூப் இப்படி அங்கே. எனக்கு மூணு விதமான ஸ்டூடண்ட்ஸ் கூடவும் சேர்றதுக்கு வாய்ப்பு இருந்தது. எல்லார் கூடவும் பழகிப் பார்த்துட்டு நான் யார் கூட ஜெல் ஆனேன்னா இந்த முதல் வகை ஸ்டூடண்ட்ஸ் – இங்க்லீஷ்ல மட்டும் தான் பேசுவோம்னு முடிவு பண்ணியிருக்கிற ஸ்டூடண்ட்ஸ். காரணம் என்னோட ENGLISH FLUENCY ஐ டெவெலப் பண்ணிக்கணும்னா அதுக்கு ஒரே வழி, இங்க்லீஷ்ல பேசுற ஸ்டூடண்ட்ஸ் கூடவே இருக்கிறது, அவங்க கூட பேசுறது, பழகுறதுன்னு முடிவு பண்ணினேன். பேசிப் பழகினாத்தான் மொழி வரும். சித்திரமும் கைப் பழக்கம்…. (மௌனம்)

நாம் : செந்தமிழும் நாப் பழக்கம் !

திரு.இளங்கோ : இல்லே.. இங்க்லீஷும் நாப்பழக்கம் (பழமொழியை திருத்தி சொல்கிறார்).

(அறை முழுதும் சிரிப்பு)

திரு.இளங்கோ : இங்க்லீஷ் மட்டுமில்லே… எந்த மொழியும் பேசிப் பழகினாத்தான் வரும். அப்போ இங்க்லீஷ்ல பேசணும்னு சொன்னா பேசுறவங்களோட இருந்தாத்தானே முடியும்? அவனோட ATTITUDE பத்தி நான் கவலைப்படலே. எனக்கு அதைப் பற்றி அக்கறையும் இல்லே. அவங்களோட LANGUAGE SKILL ஐ என்னோட LANGUAGE SKILL ஐ டெவெலப் பண்ணிக்க ஒரு பிளாட்பாரமா யூஸ் பண்ணிக்க முடிவு செஞ்சேன். அதுக்கப்புறம் காலேஜ் கல்சுரல் அசோஸியேஷன், டிபேட் சொஸைட்டி, இதிலெல்லாம் பார்டிசிபேட் பண்ணினேன். லயோலா காலேஜ் லைட் மியூசிக் பேன்ட் ஒன்னு இருந்தது. அதுல சிங்கரா பார்டிசிபேட் பண்ணுவேன். நாங்க போகாத பங்க்ஷன் இல்லே. கலந்துக்காத கல்சுரல்ஸ் இல்லே. ஸ்கூல்ல படிக்கும்போதே நான் ஜூனியர் ஆர்கெஸ்ட்ராவுல நான் ஒரு சிங்கர். அதனால என்னோட பாட்டு திறமையும் நல்லா வளர்ந்துச்சு.

லயோலாவுல M.Sc. ல தமிழ்நாடளவில் தங்க மெடல். 1994ல் காலேஜை விட்டு வெளியே வந்தபோது சிறந்த மாணவராக லயோலா காலேஜ் நிர்வாகம் அவார்ட் கொடுத்து பாராட்டியது.

அப்புறம் மெட்ராஸ் யூனிவர்சிடியில ‘ஆங்கிலத்தை எப்படி கற்றுத் தருவது?’ என்கிற தலைப்பில் ரிசர்ச் பண்ணி அதுல M.Phil முடிச்சேன். பின்னர் சி.பி.எஸ்.இ. ஸ்கூல் ஒண்ணுல ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து வொர்க்க்ஷாப்புகள் நடத்துவேன். அப்புறம் குருநானக் காலேஜ்ல லெக்சரர். மறுபடியும் மெட்ராஸ் யூனிவர்சிடியில லெக்சரர்.

ஒரு கட்டத்துக்கு மேல இந்த 9 TO 4 ஜாப் பிடிக்காம அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சேன். இது ஒரு டர்னிங் பாய்ண்ட்.

நாம் : நீங்க ஸ்கூல்ல படிக்கும்போது நடந்த மறக்க முடியாத சம்பவம் ஏதாச்சும் சொல்லுங்களேன்?

திரு.இளங்கோ : 10 வது முடிச்சவுடனே பிளஸ் 1 அட்மிஷனுக்காக நான் ஒரு மெட்ரிகுலேஷன் ஸ்கூலுக்கு போனேன். இது மாதிரி VISUALLY IMPAIRED ஸ்டூடண்ட்ஸ் யாரையும் அவங்க சேர்த்துகிட்டது கிடையாது. நல்ல ரேங்க் எடுத்திருந்ததாலே எனக்கு நம்பிக்கை இருந்திச்சு. பிரின்சிபால் பார்த்துட்டு சொன்னாரு, “நல்ல ரேங்க் எடுத்திருக்கே. ஓகே. ஆனா, உங்களை மாதிரி மாணவர்களை எங்களுக்கு ஹேண்டில் பண்ண தெரியாது. ஸாரி… நீங்க வேற எங்காவது பாருங்க” அப்படின்ன சொன்னாரு.

எனக்கு அப்போதைக்கு வேற எந்த ஸ்கூல்லயும் சேர முடியாத ஒரு சூழ்நிலை. என்னால அலைய முடியாது வேற. “சார்… எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நான் நல்லா படிச்சி, நல்ல ரேங்க் வருவேன்” அப்படின்னேன்.

“படிக்கிறதை பத்தியே பிரச்னை இல்லேப்பா. நீ நல்லா படிப்பே என்பது உன்னோட சர்டிஃபிகேட்ஸை பார்த்தாலே தெரியுது. அது இல்லே பிரச்னை. HOW WILL YOU MANAGE? அதாவது பிளஸ் 1 கிளாசஸ் எல்லாம் 3 வது ஃப்ளோர்ல இருக்கு. இன்னொரு கிளாஸ் அந்த பில்டிங்கல நாலாவது ப்ளோர்ல இருக்கு. எப்படிப் போவே அங்கெல்லாம்?” அப்படின்னு கேட்டாரு.

நான் சொன்னேன் “ஸ்டெப்ஸ் ஏறி போறதுக்கு கால் தான் நல்ல ஸ்ட்ராங்கா இருக்கணும் சார். எனக்கு கண் தானே தெரியாது? என்னோட கால் ரெண்டும், நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு. அது போதும் சார் எனக்கு” என்றேன். என்னோட பதிலால ரொம்ப இம்ப்ரெஸ் ஆன அவர், எழுந்து வந்து என் தோளை தட்டிகொடுத்து, “ஓ.கே. இந்த ஸ்கூல்ல உன்னை சேர்த்துக்குறேன்” என்றார். நானும் நல்லா படிச்சி எல்லா டெஸ்ட்லயும் எக்ஸாம்லயும் பர்ஸ்ட் வந்தேன். அதுக்கப்புறம், காலேஜ், யூனிவர்சிடி அப்படின்னு என்னோட கல்வி வளர்ந்துச்சு.

இப்போ என்ன நடந்துகிட்டு இருக்குன்னா ஆயிரக்கணக்கான பேர்கள் கிட்டே என்னோட ஆட்டோகிராஃப் இருக்கு.

(கைகளை தட்டுகிறோம்!)

வெல்டன் சார்… வெல்டன்…. ஹார்ட்லி இந்த பேட்டி எடுக்குறதுக்கு ஜஸ்ட் ரெண்டு நாள் முன்னாடி தான் உங்களை பத்தி தெரிஞ்சிகிட்டேன். தெரிஞ்சவுடனே, உங்களை சந்திக்கிற ஆர்வம் வந்துச்சு. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். உங்க கூட இருக்குறவங்க உங்களைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருக்கிறதை விட நான் அதிகம் தெரிஞ்சி வெச்சிருப்பேன்

(சிரிக்கிறார்)

நாம் : உங்களை மாதிரி பார்வையில்லாத சிறப்பு திறனாளி யாராவது சாதனை பண்ணினவங்க உங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்காங்களா?

திரு.இளங்கோ : இல்லே… அப்படி யாரும் எனக்கு தெரிஞ்சி இல்லே. எனக்கு நான் தான் இன்ஸ்பிரேஷன். ஆனா, ஸ்கூல் படிக்கும்போது ஹெல்லன் கெல்லரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு பார்வையில்லே, காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. பேசுறவங்க உதட்டை தொட்டு பார்த்துட்டு அவங்க பேசுறதை புரிஞ்சிக்குவாங்க.

(ஹெல்லன் கெல்லர் தான் பார்வையற்றவர்களில் முதன் முதலாக டிகிரி பட்டம் பெற்றவர். கூடுதல் விபரங்களுக்கு தயவு செய்து http://en.wikipedia.org/wiki/Helen_Keller என்ற முகவரியை செக் செய்யவும்).

இவங்ககிட்டே இருந்த ஒரு பிளஸ் பாயிண்ட் என்னன்னா இவங்களுக்கு இருந்த வசதி. நல்ல பேக்ரவுண்ட். அவங்க அப்பா அம்மா இவங்களை கவனிச்சிக்கிறதுக்குன்னே தனியா ஒரு டீச்சரை அப்பாயின்ட் பண்ணினாங்க. அதுக்காக பார்வையில்லாம ஆன வசதியோட இருக்குறவங்க எல்லாரும் அவங்களை மாதிரி வருவாங்கன்னு நான் சொல்லலே. It depends on their will power.

பார்வையற்றோர்கள் ஓரளவு சிரமங்களை குறைத்துக்கொண்டு சராசரி வாழ்க்கை வாழ உதவும் கருவிகள் (GADGETS) அங்கு பயன்பாட்டில் அதிகம் உண்டு. சொல்லப் போனால் பார்வையற்றோர்களுக்கென்றே விசேஷ நியூஸ் பேப்பர்கள் அங்கு காலை மாலை என இரு வேளையும் வெளிவருகிறது. இங்கே அந்தளவு டெக்னாலஜி வரலே. அதுல கொஞ்சம் தான் வந்திருக்கு. இங்கேயும் அந்த மாதிரி வர வெக்கலாம். ஆனால், அது ரொம்ப எக்ஸ்பென்சிவ். READING MACHINE ஒன்னு இருக்கு. அதுல எல்லா லேங்குவேஜும் படிச்சி நமக்கு சொல்ற வசதி இருக்கு. ஆனா, என்னன்னா நம்மோட கரன்சிக்கு அதோட மதிப்பு என்ன தெரியுமா? ரூ.5,00,000/-

நாம் : எல்லாராலயும் இதை வாங்க முடியாது…

திரு.இளங்கோ : எல்லோராலயுமா? நீங்க வேற EDUCATION INSTITUTIONS ஆல கூட வாங்க முடியாது… இங்கே ப்ளைண்டுக்காக ஸ்பெஷல் ஸ்கூல்ஸ் வெச்சிருக்காங்களே… அவங்களே கூட வாங்க மாட்டேங்குறாங்க… சாமானியன் எப்படி வாங்க முடியும்?

So, இங்கே இருக்குற அரசாங்கங்கள் என்ன செய்யலாம்னு சொன்னா… நான் சொல்றது மத்திய அரசாங்கம் & மாநில அரசாங்கம் ரெண்டும் தான்… பார்வையற்றோர்களுக்கான இந்த அடிப்படை வசதிகள், மற்றும் கருவிகள் இதெல்லாம் அவங்களுக்கு மலிவா கிடைக்குறதுக்கு ஏற்பாடு செய்யலாம். அதுக்கு மானியம் கொடுக்கலாம்.

நாம் : எது எதுக்கோ மானியம் கொடுக்குறவங்க… இதை புறக்கணிக்கிறது அநியாயம் சார்….

திரு.இளங்கோ : நினைச்சி பாருங்க…தமிழ்நாட்டுல்ல மொத்தம் பார்வையற்ற சிறப்பு திறனாளிகள் எத்தனைப் பேர் இருப்பாங்க? மிஞ்சி மிஞ்சிப் போனா சில ஆயிரம் பேர் இருப்பாங்க… மொத்த இந்தியாவுலன்னு சொன்னா ஜஸ்ட் ஒரு 2 லட்சம் பேர் இருப்பாங்களா? அவங்களுக்கு இதெல்லாம் மானியத்துல கொடுத்தா எவ்ளோ நல்லா இருக்கும். கவர்மெண்ட் போடுற பட்ஜெட்ல இதுக்காக ஜஸ்ட் ஒரு கொசு அளவு செலவு செஞ்சா போதுமே…. செய்ய மாட்டேங்குறாங்க.

நாம் : சிம்பிள் சார்… பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அன்னைக்கே சொல்லிட்டாரு… “இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா…” அப்படின்னு… இதுல அவர் தூக்கம்னு சொல்றது தூங்குறதை இல்லே. செயலாற்றாமல் இருப்பதைத் தான்.

திரு.இளங்கோ : கரெக்ட். இந்த செயலாற்றாம இருக்குறதுக்கு காரணம் என்னன்னா… இதுல அவங்களுக்கு ‘அரசியல் லாபம்’ அதாவது POLITICAL MILEAGE இல்லே.

நாம் : இதுவே ஒரு ஜாதி சங்கம் இல்லே ஜாதிக் கட்சியா நீங்கல்லாம் இருந்தீங்கன்னா…. நல்ல சப்போர்ட் பண்ணுவாங்க…..

திரு.இளங்கோ : ஒவ்வொரு ஜாதிக்காரனும் கொடுக்குற புள்ளி விபரத்தை பார்க்கும்போது தமிழ் நாட்டோட பாப்புலேஷன் மட்டுமே சுமார் 100 கோடியை தாண்டும்.

(அனைவரும் சிரிக்கிறோம்)

திரு.இளங்கோ : அது மட்டுமில்லே… பார்வையற்ற சிறப்புத் திறனாளிகள் எல்லோருக்கும் இது பற்றி விழிப்புணர்வு இல்லே… நம்மோட வாழ்க்கையை ஓரளவு சுலபமாக்குறதுக்கு இன்னின்ன கருவர்கள் தொழில்நுட்பங்கள் இருக்குது என்பது பற்றிய அடிப்படை KNOWLEDGE கூட அவங்களுக்கு இல்லே…

நாம் : உங்களோட இன்ஸ்பிரேஷன் யார் சார்?

திரு.இளங்கோ : என்னுடைய இன்ஸ்பிரேஷன் & நண்பர் அப்படின்னா இவரை வேணும்னா சொல்லலாம். திரு.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். என்னுடைய நெருங்கிய நண்பர் அவர்.
நான் தான் எனக்கு ரோல் மாடல்!

நாம் : அதாவது உங்களை கவர்ந்த தேசியத் தலைவர்கள் சாதனையாளர்கள் இப்படி… யாராச்சும்? அதாவது ரோல் மாடல்?

(திரு.இளங்கோ பதில் கூறாமல் ஆழ்ந்து யோசிக்கிறார்)

நாம் : என்ன சார் யோசிக்கிறீங்க? நாடு அந்த நிலைமையிலயா இருக்கு? ஒருத்தரை கூட உங்களால சொல்ல முடியலையா?

(அனைவரும் சிரிக்கிறோம்)

திரு.இளங்கோ : என்னுடைய செஷன் எல்லாத்துலயும் என்னை கேட்க்க கூடிய காமன் கேள்வி இது… உங்க ரோல் மாடல் யாரு என்று. அதுக்கு நான் சொல்லக்கூடிய பதில் – எனக்கு நிறைய துறைகள்ல பரிச்சயம் இருக்கு. SINGING, VOICE-OVER, PUBLIC SPEAKING இந்த மூனுல மட்டும்னு பார்த்தீங்கன்னா கூட ஒவ்வொரு துறைக்கும் குறைஞ்சது ஒரு அஞ்சு பேர் இன்ஸ்பிரேஷனா இருக்காங்க. ஆனா, டோட்டலா ரோல் மாடல் என்கிற பதத்துக்கு பார்த்தீங்கன்னா.. எனக்கு யாரும் இல்லே. ஏன்னா நான் தான் எனக்கு ரோல் மாடல்.

நாம் : சூப்பர்….

திரு.இளங்கோ : காரணம் என்னன்னா… நான் என்னை ரோல் மாடலா வெச்சிருக்கும்போது தான் விழுறதுக்கு பயப்படமாட்டேன்…. விழுந்தா எழுந்திருக்கிறதுக்கும் தயங்கமாட்டேன்.

திரு.இளங்கோ : நீங்க கேட்க்கிறதால சொல்றேன்… ஜோதிராம் பூலேன்னு ஒருத்தரு. மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்த்திருத்தவாதி. பெரியார் மாதிரின்னு வெச்சிக்கோங்களேன். அவரை பத்தி அதிகம் யாருக்கும் தெரியாது. அவரை வேணும்னா என்னோட ரோல் மாடல்னு சொல்லலாம்.

நாம் : உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

திரு.இளங்கோ : எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கிறது.

நாம் : நீங்க தான் சார் மிகப் பெரிய ஆன்மீகவாதி. எப்படின்னு பார்த்தா…சுவாமி விவேகானந்தர் சொல்படி நீங்க மிகப் பெரிய ஆன்மீகவாதி. சுவாமி விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார்னா….

“எவன் ஒருவன் தன்னை பரிபூரணமாக நம்புகிறானோ அவன் தான் மிகப் பெரிய ஆன்மீகவாதி. எவன் தன்னை நம்பவில்லையோ அவன் தான் உண்மையில் கடவுள் மறுப்பாளன்!” – சுவாமி விவேகானந்தர்

“He is an atheist who does not believe in himself. The old religion said that he was an atheist who did not believe in God. The new religion says that he is an atheist who does not believe in himself.”
― Swami Vivekananda

திரு.இளங்கோ : சரியான கருத்து. என்னுடைய உள்ளுணர்வை பிரதிபலிக்கும் ஆணித்தரமான வார்த்தைகள்.
யாரோட பாதையிலும் நான் போக விரும்பலே… நான் போற இடமெல்லாம் பாதையா மாறனும்

நாம் : அடுத்து எங்க கேள்வி ஒன்னு… ரஜினி சார் படங்கள் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவரை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

திரு.இளங்கோ : எனக்கு 70 களின் கடைசி மற்றும் 80 களின் ரஜினியை ரொம்ப பிடிக்கும். குறிப்பாக ‘தனிக்காட்டு ராஜா’ படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்னு. அந்த படத்துல அப்பாவுக்கும் பையனுக்கும் நடுவே, ஒரு கான்வர்சேஷன் நடக்கும்.

—————————————————————————————
மேஜர் சுந்தர்ராஜன் : சூரி நீ எந்தப் பாதையில போக விரும்புறேன்னு தெரிஞ்சிக்கலாமா?

ரஜினி : (ஹா..ஹா…ஹா) பலமாக சிரிக்கிறார் “யாரோட பாதையிலும் நான் போக விரும்பலே… நான் போற இடமெல்லாம் பாதையா மாறனும் யார் நிழல்லயும் நான் இளைப்பாற விரும்பலே… அதே சமயம் என்னோட நிழல்ல சோம்பேறிகள் யாரும் இளைப்பாற விடமாட்டேன்…
—————————————————————————————

(எனக்கு இந்த டயலாக் மறந்துப் போச்சு… இவர் கரெக்ட்டா ஞாபகம் வெச்சி சொல்லும்போது அவரது பல்துறை அறிவைப் பற்றி பிரமிப்பு ஏற்பட்டது.)

திரு.இளங்கோ : எனக்கு ரொம்ப பிடிச்ச டயலாக் இது. யாரோட பாதையிலும் நான் போக விரும்பலே… நான் போற இடமெல்லாம் பாதையா மாறனும்… இந்த ரஜினியின் பன்ச்தந்திரம் புக்ல கூட வந்திருக்கும்னு நினைக்கிறேன். அந்த டயலாக்கை அவர் சொல்லும்போது அந்த கான்ஃபிடன்ஸ் நல்லா முகத்தில தெரியும்.

எனக்கும் சரி… என்னோட வேவ்லெங்க்த்தில் எத்தனையோ பேர் இருக்கிறாங்க… அவங்களுக்கும் சரி… பிடிச்ச ஹீரோன்னு சொன்னா ரெண்டே ரெண்டு பேர் தான். ஒன்னு ரஜினி… இன்னொன்னு கமல்.
சூப்பர் ஸ்டாரை சந்தித்த போது…

நாம் : ரொம்ப சந்தோஷம் சார். இது மூவி சைட். அதாவது அவரோட ஆன்-ஸ்க்ரீன் பர்சோனா. ஓ.கே. ஆனா ரஜினி சாரைப் பத்தி உங்களோட பர்சனல் ஒபீனியன் என்ன? அவரோட off-screen பர்சனாலிட்டி பத்தி உங்க ஒப்பீனியன் என்ன?

திரு.இளங்கோ : நான் ரஜினி சாரை நேர்ல மீட் பண்ணியிருக்கேன். அப்போ நான் ஸ்கூல் படிச்சிகிட்டிருந்தேன். என் நண்பர்களோட அவர் வீட்டுக்கு போனேன். ஒரு CASUAL விசிட் தான். எல்லாரும் அவர் கூட ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம். எங்க எல்லாரையும் அவர் மனைவி லதாவுக்கு அறிமுகப்படுத்தி வெச்சார். என்னை பத்தி தெரிஞ்சவுடனே… என் பக்கத்துல வந்து என் கையை பிடிச்சிட்டு உட்கார்ந்தார். நான் பேசுறதை பொறுமையா கேட்டார். ரொம்ப நல்ல மனிதர். இது ந

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum