தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஞ்சநேயர் ஆற்றல் பெற்ற அற்புதத் தலம்

Go down

ஆஞ்சநேயர் ஆற்றல் பெற்ற அற்புதத் தலம்  Empty ஆஞ்சநேயர் ஆற்றல் பெற்ற அற்புதத் தலம்

Post  ishwarya Sat Feb 16, 2013 2:06 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் தேவிபட்டினம்

மகிஷாசுரன் என்ற கொடிய அரக்கனை அன்னை பார்வதி வதம் செய்த புண்ணிய பூமி இது. சேது பூமி என்று சித்தர்கள் கொண்டாடும் தலமிது. இங்கு குடிகொண்டுள்ள சிவனின் பெயர் திலகேஸ்வரன். அன்னை பார்வதியின் அழகுப் பெயர் சௌந்தர்ய நாயகி. தசரதச் சக்ரவர்த்தியின் தலைப்பிள்ளையான ராமபிரான் பிறக்கையிலேயே அவரது கிரக நிலைகள் கோளாறு உடையது என சித்தர்கள் - முனிவர்கள் அறிந்து, பலவிதமான வேதங்களின் தன்மையையும் அவற்றை பிரயோகிக்கும் முறையையும் கற்றுத் தந்தனர். சீதையை இலங்கை வேந்தன் ராவணன் கவர்ந்து சென்றதற்கு சனிபகவானின் ஆதிக்கமே காரணம் என்று உணர்ந்த அகத்தியர், அவருக்கு ஆதித்ய ஹ்ருதய சுலோகத்தை உபதேசித்து, உப்பூர் சென்று விநாயகரை பூஜிக்கும்படி பணித்தார்.

‘‘வெயிலு விநாயகனைத்
தொழுதுயெழ வினையகலுமே - தேவி
நவநாயகரை கடலில் சமைத்து பூசிக்க
மந்தனொடு மாற்றுக்கொள் தங்
கோளாறு விலகுமென்றாமோ’’

-என்று அறிவுறுத்தினார், அகத்தியர். அவ்வண்ணமே உப்பூர் சென்று விநாயக பூஜை செய்த தசரத சக்ரவர்த்தி திருமகனார் தம் கனவில், மகிஷாசுரமர்த்தினி அம்பிகை தோன்றி, அகத்தியமுனி மொழிந்தவாறு சேதுக்கடலில் நவகிரகாதியரை உருவாக்கி, பூஜிக்குமாறு பணித்தார்.

‘‘ஏக தார விரதங் கொண்டான்
ராம நாம கீர்த்தனை தந்நாயகன்
பொங்கி பூரிக்குங் கடலையடக்கி
தங்கரங் கொண்டு பாசானமென
நவநாயகரை நின்று பூசிக்க -
மந்தனார் சேட்டை முடங்கிற்று -
மொழிவோம், மதியொடு மங்களமும்
அரவமிரண்டு மடங்க - அலியாச்சான்
சுங்கனொரு அருணனுஞ் சகாயமென
நின்றமையால் ஊழ் வொழிந்ததே’’

கடலில் நீராடி, தனது பொற்கரங்களால் அந்தக் கடலிலிருந்து மணலை எடுத்து, நவபாஷாணமெனும் நவக்கோள்களை ராமபிரான் உருவாக்கினார். ஆர்ப்பரித்த கடல் அலையை பூரிவாழ் ஜெகந்நாதப் பெருமான் சாந்தமடையச் செய்து, ராமபிரான் நிம்மதியாக நீராட இரண்டு தீர்த்தங்களையும் தோற்றுவித்தார். அவற்றை அக்கினி தீர்த்தம் மற்றும் ராம தீர்த்தம் என சித்தர்கள் பேசுகின்றனர். ராவணனை வெற்றி கொள்ள இந்த பூஜையே ஆணிவேராய் அமையப் பெற்றது.

‘‘அக்னி ராம பொய்கை புக்கு நீராடி
நவ கோளை நிறை தான்யங்
கொண்டு அருச்சிப்பார் தம்
பூர்வ வினையொரு கருமமுங்
கருகுஞ் சத்யமே. நீத்தார்தம்
ஆவியுஞ் சாந்தி பெறுமே -
நெல்லோடு பயறு பல கொண்டா
ராதிப்பார் தம் வாழ்நாள் நீள
மந்த பாக்யமறுபடுமிது சயமது காண்பீர்
திண்ணமன்றோ’’

-எனக் கூத்தாடுகின்றார், கொங்கண சித்தர். எந்த ஒரு காரியத்தில் தீவிரமாக இறங்கும் முன்னர், இந்த தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாணத்திற்கு பூஜை செய்வது காரியம் முழு வெற்றி பெற ஏதுவாகும். இங்கு தர்ப்பணங்கள் செய்வது பலன்களை கூட்டித் தரும். ஏவல், சூன்யம் போன்றவற்றால் நிற்கும் தடைகளை தவிடு பொடி செய்யும் தன்மை உடையது இந்த
நவபாஷாண தேவதைகள்.

அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்றோர்கள் தொழுது நின்ற திருத்தலம் இது. ஆஞ்சநேயர், வாயுவின் குமாரர். சனி, சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் ஆதிக்கம் கொண்டவர். இலங்கை நகர் நோக்கி இவர் புறப்படும் முன், இந்த நவபாஷாண தேவதைகளுக்கு பூஜை செய்தே புறப்பட்டார். சீதையை முதன் முதலில் இலங்கையில் இருப்பதை கண்டவர் இவர். இவர் சீதையை கண்டு, ராமரின் முத்திரை மோதிரத்தைக் காட்டி சீதாபிராட்டியாருக்கு மகிழ்வையும் தெம்பையும் ஊட்டினார். ‘‘கண்டேன் சீதையை’’ என சுருங்க சொல்லி, அயோத்தி மன்னன் ராமபிரானின் வாட்டம் தணித்தார். இவ்வாறு எடுத்த காரியத்தில் வெற்றியையும் தளராத உள்ளத்தையும் குறைந்த பேச்சால் நிறைந்த பொருள் கொண்ட சொற்கள் வரவும் காரணமாக நின்றமைக்கு இந்த நவபாஷாண பூஜையும் மகிஷாசுரமர்த்தினி தியானமும் ராமநாம கீர்த்தனையுமே காரணங்கள் என்று அனுமனே அகஸ்தியரிடம் கூறுவது, மேலும் சிறப்பு.

‘‘கண்டேன் தேவியை - காசினியாந்
தென்னிலங்கை தன்னை கொளுத்
தினேன்றி யரக்கர் கூட்டத்தை
கொத்தாய் கொன்றேன்
மதிசேர் தசகண்டனை
யாம நன்மொழி
யோதி யறிவு செறித்தோம் - யாவுமே
ராம நாமகீர்த்தனை தம் கடாட்சந்த
ன்னோடவனாக்கிய பாசான
பூசையின் பரிவே’’

-என்றான், அனுமன். புத்தியில் சிறந்தவனாகவும் வஜ்ர தேகம் உடையவனாகவும் சொர்க்க பதவி வேண்டாம் எனத் துறந்த வெற்றி வீரனாகவும் சனி பகவான் உள்ளிட்ட எந்த கொடுமையான கிரகத்தாலும் பாதிக்கப்படாதவனுமாகவே அனுமன் இருப்பதற்கான காரணம் நவபாஷாண கோயிலில் அதிக சிரத்தையுடன் அவன் ஆற்றிய பூஜை மற்றும் அவன் கொண்ட நம்பிக்கையும்தான். எனவே நாம் நம்பிக்கையுடன் அதிகமான சிரத்தையுடன் நவபாஷாண சிற்பங்களை பூஜித்து நின்றால், பேச்சுவன்மை கூடும். குழந்தைகளுக்கு எவ்வித காயமும் உடம்பில் நேராது காக்கும். கல்வி விருத்தி அடையும். நினைவாற்றல் மேலோங்கும். சனி போன்ற கொடிய கோள்களால் பெருந்தீமை வாராது. தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது உண்மை.

‘‘இங்குள்ள எட்டு கரங்களைக் கொண்ட மகிஷாசுரமர்த்தினியைத் தொழ, ஐஸ்வர்யம் குறைவின்றி சேரும். தனம், தான்யம், மனை, ஆயுள் போன்றவை விருத்தி அடையும். திருமணங்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் உடையதாக அமையும். தற்கொலை போன்ற விபரீத எண்ணங்களில் இருந்து விடுதலை கிட்டும்’’ என்கின்றார், போகர்.

‘‘மகிசனையழித்த மாது தமை
சரணஞ் செய்தார் நீடுவாழ்வர் -
பொன்னொடு பொருளுங்
கூடும் - பிரிந்த வுறவும்
நேசம் பெறும் மனமொத்த
வாழ்வுதான் வாழலாமே’’

நாமும் ஒருமுறை ராமர் தம் கரங்களால் உருவாக்கிய நவபாஷாண மூர்த்திகள் அருளும் கோயிலைக் கண்டு தொழுது நம் வினை
களையலாமே!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்!
» 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!
» தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!
» திருபுட்குழி தலம்
» திருபுட்குழி தலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum