தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குகேஸ்வரர் கோவில்

Go down

குகேஸ்வரர் கோவில் Empty குகேஸ்வரர் கோவில்

Post  amma Sun Jan 13, 2013 3:31 pm

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் கூகூர் என்ற புண்ணிய தலத்தில் கல்யாண சுந்தரி உடனாய ஸ்ரீ குகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலம் இது. முருகனுடைய திருநாமங்களில் `குகன்' என்பதும் ஒன்றாகும்.

ஆன்மாவின் இதய குகையில் உறைபவர் என்ற காரணத்தால் இவர் குகன் என்று அழைக்கப்படுகிறார். குமரன், குருபரன், முருகன், சரவணன், குகன் என பல்வேறு பெயர்களை கொண்ட முருகப் பெருமான் இந்த தலத்தில் தந்தையை வழிபடுகிறார். இதனால் இறைவன் குகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு இறைவனே சந்தன மரமாகி சந்தனக்கட்டையாக விளங்குகிறார். சந்தனம் அரைக்க, அரைக்க மணம் தருவது போல வழிபட, வழிபட எல்லா நலன்களையும் அருளுகிறார் இத்தலத்து இறைவன். இவருக்கு ஒவ்வொரு மாத சதய நட்சத்திரத்தில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இவரை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவோர் இறையருளை எளிதில் பெறலாம் என்கிறார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum