தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நன்றி மறக்காதீர்கள்

Go down

நன்றி மறக்காதீர்கள் Empty நன்றி மறக்காதீர்கள்

Post  birundha Sat Feb 09, 2013 3:27 pm

* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள் ஆவார்கள்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்திடலாம். அலைபாயும் கடலையும் தாண்டிடலாம். நச்சுப்பாம்பையும் மாலையாகக் கழுத்தில் அணிந்திடலாம். ஆனால், மூடனைத் திருத்த யாராலும் முடியாது.
* தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல, உயர்ந்த குணம் கொண்டவர்கள் தாழ்ந்தநிலையை அடைந்தாலும் அவர்கள் உயர்ந்த எண்ணங்களையே கொண்டிருப்பார்கள்.
* நாம் எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். ஒருவன் தக்க தருணத்தில் செய்த உதவியை மறந்த(செய்ந்நன்றி மறத்தல்) பாவத்தை எந்த தெய்வமும் மன்னிக்காது.
* தவம் செய்ய காட்டுக்குப் போக வேண்டாம். பட்டினி கிடக்க வேண்டாம். தலைகீழாக நிற்கவேண்டாம். வீட்டிலேயே இருந்து கொண்டு மனைவி மக்களுடன் வாழ்ந்து கொண்டே தவம் செய்யலாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum