தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்

Go down

ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்  Empty ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்

Post  meenu Sat Feb 09, 2013 2:48 pm

?() ஒவ்வொருவரும் அம்பிகையைப் பூஜை செய்வது பூர்வ புண்ணிய பலத்தினால் வருவது. எதிலும் சக்தியே பிரகாசிக்கிறது. ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்அந்த சக்தியை ஒரு இடத்தில் நிறுத்தி அதனுடைய பேரருளை பக்தி மார்க்கமாக வாராஹி அம்பாள் என்று நினைவில் வைத்து அம்பாளை லயம் செய்து கொள்வதே உபாசனை என்பதாகும். அவ்வாறு தாங்கள் வாராஹியை உபாசித்தால் சகலவிதமான காரியங்களும் நொடியில் சித்தியாகும். ஆதிசக்தியாகிய பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக வாராஹி தேவி அவதரித்தாள். ஆகையால் நாம் வாராஹியை அன்றாடம் வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பு : 1. வாராஹிக்கு ஏற்ற மாலை - செவ்வரளி மாலை. 2. வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் - செந்தாமரை, வெண் தாமரை. 3. வாராஹிக்கு ஏற்ற கிழங்கு - தாமரைக் கிழங்கு, அல்லிக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, பனங்கிழங்கு. 4. வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் - மரிக்கொழுந்து, கருப்பு துளசி, செந்தாழை, மல்லியிழை. 5. வாராஹிக்கு ஏற்ற வேர்கள் - வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், சிறு நன்னாரி வேர், பெரு நன்னாரி வேர். 6. வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்-செவ்வண்ண வஸ்திரம் ஹோமத்தில் சேர்க்க வேண்டும். 7. வாராஹிக்கு ஏற்ற நெய்வேத்திய பலகாரங்கள் - கருப்பு உளுந்து வடை, பாதாம் கேசரி, முந்திரி உருண்டை இத்துடன் பானகம் முதலியன. வாராஹியின் நான்கு திருக்கோலங்கள் : 1. சிம்ம வாகனத்தில் அமர்ந்திருக்கும் வாராஹி. 2. மகிஷ வாகனத்தில் (எருமை) அமர்ந்திருக்கும் வாராஹி. 3. புலி வாகன வாராஹி. 4. வெண் குதிரை வாகன வாராஹி. இந்த நான்கு திருக்கோலங்களும் நான்கு விதமான பலன்களைத் தருவதாக சித்தர்களாலும், மந்திர சாஸ்திரங்களாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஜபத்திற்கான மந்திரங்கள் மந்திரங்கள் சப்த ரூபமாக உள்ளவை. இவை தேவதைகளின் ஸூக்ஷ்ம சரீரம். இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு. இன்ன மந்திரம் இன்ன பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். உபாஸனை, ஜபத்தினால்தான் வலிமை பெறும். ஜபத்திற்கு சாதனம் மந்திரம். ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி? மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர். 1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது. உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும். 2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே. 3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம். 4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம். 5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம். 6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும். 7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது. 8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது. 9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது. 10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை. 11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது. 12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன. ஜபத்திற்குரிய இடங்கள் ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது. சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும். பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம். கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது. சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது. கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும். ஸ்ரீ வாராஹி மூல மந்திரம் ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்! ஐம் க்லௌம் ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி, வாராஹி வராஹமுகி, வராஹமுகி அந்தே அந்தினி நம: ருந்தே ருந்தினி நம : ஸ்தம்பே ஸ்தம்பினி நம: ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வேஷாம் ஸ்ர்வவாக் சித்த, சக்ஷர் முககதி ஜிக்வா, ஸ்தம்பனம் குருகுரு சீக்ரம் வஸ்யம் ஐம் - க்லௌம் - ட : ட : ட : ட ஹும் அஸ்த்ராய பட் ஓம் அஸ்யஸ்ரீ வாராஹி மஹா மந்த்ரஸ்ய பகவான் பைரவ ரிஷித் ருஷ்டிப் ஸந்தவராகி மஹா சக்தி தேவதா க்லைம் பீஜம் க்லாம் சக்தி க்லூம் கீலகம் மம ஸ்ரீ வாராஹி மஹா சக்தி பிரசன்ன ஸித்தியர்த்தே ஜெபோ விநியோக ஹா! நியாஸம் : கரம் : ஐம் - அங்குஷ் டாப்யாம் நம: க்லிம் - தர்ஜ்ஜனிப்யாம் நம: சௌ - மத்யமாப்யாம் நம: ஐம் - அனாமி காப்யாம் நம: க்லீம் - கனிஷ்ட காப்யாம் நம: சௌ - கரதலப்ருஷ்டாப்யாம் நம: நியாஸம் : அங்கம் : ஐம் ஹ்ருதயாக நமஹ க்லீம் சிரசே ஸ்வாஹ சௌம் சிகாயை வஷட் ஐம் கவசாய ஹும் க்லீம் நேத்ராய வெளஷட் சௌம் அஸ்திராயபட் பூர்ப்பு வஸ்ஸுவரோம் இதி திக்பந்த : அஸ்ய ஸ்ரீ மஹா வாராஹி ! மஹா மந்திரஸ்ய ! தரணீ வாராஹ ருஷி ! ப்ரஹதீ சந்த்; மஹா வாராஹி தேவதா !! த்லௌம் பீஜம் ! ஐம் சக்தி ! ஹ்ரீம் கீலகம் ! ஸ்ரீ மஹா வாராஹி ப்ரஸாத ஸித்தியர்த்தே ஜப விநியோக தியானம் : வந்தே வராஹவக்த்ராம் மணிமகுடாம் வித்ரும ச்ரோத்ர பூஷாம் ஹாரக்ரை வேய துங்கஸ்தனபர நமதாம் பீத கௌசேய வஸ்த்ராம் தேவீம் த்÷க்ஷõர்த்வ ஹங்தே முஸலமத் வரம் லாங்கலம் வா கபாலம் வாமாப்யாம் தாரயதீ குவலய கலிதாம் ச்யாமளாம் ; சுப்ரனை !! லம் இத்யாதி பஞ்சபூஜா தியானம் : அஸ்ய ஸ்ரீ மஹா வாராஹி மந்தரஸ்ய தரணி வாராஹ ரிஷி : ப்ரஹதீ சந்தாம்ஸி மஹா வாராஹி தேவதா மமகார்ய சித்யர்த்தே வாராஹி தேவி வந்த ஜெப சித்யர்த்தே மமகுல சந்தோஷணார்த்தே ஜெபே விநியோகக ஸ்ரீ அஸ்வாரூடாம்பா மகா மந்திரம் ஓம் அஸ்ய ஸ்ரீ அஸ்வாரூடாம்பா மகா ஸ்வச் சந்த பைரவ ருஷி காயத்ரீ மந்திரஸ்ய சந்த: ஸ்ரீ அஸ்வாரூடாம்பா தேவதா! ஆம் பீஜம் ஹ்ரீம்சக்தி க்ரோம் கீலகம் மமஸ்ரீ அஸ்வாரூடாம்பா பிரசாத சித்யர்த்தே அஸ்வாரூடாம்பா மந்த்ர ஜெப விநியோக ஆம் - அங்; ஹ்ரீம் - த; க்ரோம் - ம ஏஹி - அனா - பரமேஸ்வரி - கனி ஸ்வாஹா கர தலகிர நம ஏவம் க்ருதயன்யாச : தியானம் அஸ்வாரூடாம் காராக்ரைர் நவ கனக மயீம் வேத்ர யஷ்டிம் ததானம் தக்ஷன்யே நா நாயந்கீம் பக்த நூலதாம் பாராபத்தம் சுசாத்யம் தேவீம் நித்ய பிரசன்னாம் சசி சகலதராம் தாம் த்ரிநேத்ரா பிராமாம் உத்யத் கவ்யாம் சபத்யாம் சகல சுப பலப்பிராப்தி (க்ருத்சாம் ஸ்ரீ யன் நமSmile மந்திரம் : ஆம் - ஹ்ரீம் - க்ரோம் ஏஹி பரமேஸ்வரி ஸ்வாஹா ஸ்ரீ வாராஹி அஷ்டகம் தேவி க்ரோடமுகி ந்வதங்ரி கமலத்வத் த்வானு ரக்தாத்மனே மஹ்மம் த்ருஹயதயோ மஹேசி மனஸா காயேன வாசா நர ; தஸ்யாசு த்வதயோக்ர நிஷ்டுரஹலா கதா ப்ரபூதவ்யதா பர்யஸ்யன் மனஸோ பவந்து வபுஷ ; ப்ராணா ப்ராயாணோன் முகா தேவி த்வத்பத பத்ம பக்தி விபவ ப்ரஷீனே துஷ்கர்மணி ப்ராதுர்பூத ந்ருசபர்ஸ பாவமலினாம் வ்ருத்திம் விதத்தே மயி யோ தேஹி புவணேத தீய ஹ்ருதாயாந் நிர்கத்வரைர் லோஹிதை ஸத்ய; பூரயஸே கராப்ஐ சஷகம் வாஞசாபலைர் மாமயி சண்டோத்துண்ட விதீர்ண துஷ்ட ஹ்ருதய ப்ரோத்பின்ன ரக்தச்சுடா ஹாலாபான மதாட்ட ஹாஸநித தா கோப ப்ரதா போந் கடே, மாதர் மத் பரிபந்தினா மபஹ்ருதை ; ப்ரானண ஸத் வதங்ரித்வயம் த்யானோட்டாமர வைபவோதய வசாத் ஸந்தர்ப்பயாமி க்ஷணா ; ச்யாமாம் தாமரஸானனாங்ரி நயனாம் ஸோமார்த்த ஷடாம் ஜகத் த்ராண வ்யக்ர ஹலாயு தோக்ர முஸலாம் ஸந்த்ராஸ முத்ராவதீம் யேத்வாம் ரக்த கபாலினீம் ஹரவராரோ ஹேவரா ஹானனாம் பாவை; ஸந்தத்தே சதப் க்ஷணம்பி ப்ராணாந்தி தேஷம் த்விஷ விஸ்வாஸ்தீஸ்வர வல்லபே ஜெயஸேயா த்வம் நித்யந்த்ரி யாத்மிகா பூதானாம் புருஷாயு ÷ஷாவதிகரீ பகா ப்ரதா கர்மணாம் தர்மயாசே பவதீம் கிமப்யவிதகம் யோமத் விரோ நீஜன ; தஸ்யாயர்ம வாஞ் சிதாவதி பவேத் மாதஸ்தவை வாக்ஞயா மாதஸ்ஸம்யகு பாஸிதும் ஜடமதி ஸ்திவாம் நைவ சக்னோம் யஹம் யத்யப்யன் வித தேசிகாங்ரி கமலானுக் ரோச பாத் ஸங்கின ; வாராஹி வ்யத்மான மானஸ களத் ஸெனக்யம் ஹதாசாபலம் ஸிதத்தம் தமபாக்ரு தாத்ய வஸிதம் ப்ராப்தா கிலோத் பாதகம் கிரந்தத் பந்துஜனம் களங்கித குலம் கண்ட வரணோத்யத் க்ரியிம் பச்யாமி ப்ரதிக்ஷமா பதிதம் ப்ராந்தம் லுடந்தம் முஹு வாராஹி த்வம்சேஷ ஜந்து ஹீபுன ; ப்ராணாத்மிகா ஸ்பந்தஸே சக்திவ்யாபத சராசர கலுய தஸ்த்வாமேத தப்யர்த்தயே த்வத பாதாம்புஜ ஸங்கினோமம ஸக்ருத் பாபம சிகீர் ஷத்தியே தோஷாம் மாகுரு சங்கரப் பிரியதமே தேஹாந்தரா வஸ்திதம் ஸ்ரீ வாராஹி ஸ்தோத்ரம் தேவ்யுவாச : 1. நமோஸ்து தேவி வாராஹி ஐயைகாரஸ்வரூபிணி ! ஜபித்வா பூமிரூபேண நமோ பகவதிப்பரியே!! 2. ஜயக்ரோ டாஸ்து வாராஹி தேவித் வாம்ச நமாம்யஹம்! ஜய வாராஹிவிஷ் வேஸிமுக்ய வாராஹிதே நம!! 3. ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டாநாம் வாக் ஸ்தம்ப நகரீநம! நமஸ் ஸ்தம்பிநி ஸ்தம்பே தவாம் ஜ்ரும்பே ஜரும்பிணி தே நம!! 4. முக்யவாரா ஹிவந்தே த்வாம் அந்தே அந்திநி தே நம! ருந்தே ருந்தேநிவந்தே த்வாம் நமோ தேவீது மோஹி நீ !! 5. ஸ்வபக்தானாம் ஹி ஸர்வேஷாம் ஸர்வகாம ப்ரதே நம! பாஹ்வோ ஸ்தம்பகரீம் வந்தே சித்தஸ் தம்பிந தே நம!! 6. சக்ஷúஸ் ஸ்தம்பிநி த்வாம் முக்யஸ்தம்பி தே நமோ நம ஜகத்ஸ்தம்பிநி வந்தே த்வாம் ஜீஹ்வாஸ்தம்பந காரிணி 7. ஸ்தம்பனம் குரு ஸத்ரூணாம் குரு மே ஸத்ருநாஷநம் ஸீக்ரம் வஸ்யம் ச குரு யோக்நௌ வாசாத்மகேநம 8. டசதுஷ்டயரூபே த்வாம் ஸரணம் ஸர்வதா பஜே ஹோமாத்ம மகே பட்ரூபேண ஜய ஆத்யாநநேஸிவே 9. தேஹி மே ஸகலான் காமான் வாராஹீ ஜெகதீஸ்வரி நமஸ்துப்யம், நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம 10. இதம் ஆத்யாநநா ஸ்தோத்ரம் ஸர்வ பாபவிநாஸநம் படேத்ய ஸர்வதா பக்த்யா பாத கைர் முச்யதே ததா 11. லபந்தே ச ஸத்ரவோ நாஸம் து ; கரோகாபம்ருத்யவ மஹதாயுஷ்யமாப் நோதி அல க்ஷ் மீர் நாஸமாப்நுயாத் 12. ந பயம் வித்ய தே க்வாபி ஸ்ர்வதா விஜயோ பவேத் அபீஷ்டார்தான் லபேத் ஸர்வான் ஸரீரீ நாத்ர ஸம்ஸய (இதி ஸ்ரீருத்ர யாமளே உமா மஹேஸ்வர ஸம்வாதே ஆதிவாராஹீ ஸ்தோத்ரம் ஸமாப்தம்) பாம்பன் சுவாமிகள் அஷ்டலட்சுமி வழிபாடு-சமஸ்கிருதம் பெண்கள் மூக்குத்தி அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன... கனவில் யானை வந்தால் என்ன பலன்? கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல என்பதன் ... நெருப்பை ஏன் இந்துக்கள் வணங்குகிறார்கள் தெரியுமா? சிவனே என்றிரு என்பதன் பொருள் தெரியுமா? திருமணத்தில் தாலிகட்டும் போது கெட்டிமேளம் ஒலிக்கச்... ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா? மகுடி சத்தம் பாம்புக்கு கேட்குமா? வாராஹி அம்மனை வழிபடுவது எப்படி?(ஸ்ரீ வாராஹி மூல மந... சிவன் கோயில்களில் பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து... சிவாலயங்களில் தரிசனம் செய்து விட்டு உட்கார்ந்து வர... சூரிய பூஜையின் சிறப்பும் அவசியமும்! மூல மந்திரங்கள் ஆடி கிருத்திகை மரணத்தின் பின்.. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது? ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்? கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்... காற்றடித்து கற்பூரம், விளக்கு அணைந்துவிட்டால் மனம்... செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்க... காமாட்சி ஸ்தோத்திரம்(மந்திரங்கள் சித்திக்க) பழங்களின் ஆன்மீக மற்றும் மருத்துவ குணங்கள்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum