தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லட்சுமி குபேர பூஜை ரகசியங்கள்

Go down

 லட்சுமி குபேர பூஜை ரகசியங்கள்  Empty லட்சுமி குபேர பூஜை ரகசியங்கள்

Post  amma Sun Jan 13, 2013 12:40 pm

பரந்து விரிந்து இந்த உலகத்தில் அனைவருக்கும் பணக்காரர்களாக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால்... இந்த உலகத்தில் மனிதர்களாகப் பிறக்கின்றவர்கள் எல்லாருமே செல்வந்தர்களாக ஆகிவிடுவதில்லை. பலர் கோடிகளுக்கு அதிபதியாகவும், மேலும் பலர் லட்சங்களுக்குச் சொந்தக்காரராகவும் ஆகிவிடுகின்றனர்.

ஆனால் பல கோடி பேர் தினமும் பணி செய்து கூலி பெறுகிறவர்களாகவும் உள்ளனர். செல்வம் அதிகம் உள்ளவர்களும் வறியோரும் இன்னும் தனக்குக் குபரேனின் கடைக்கண் பார்வை கிடைத்துவிட வேண்டும் என்று பலவிதங்களில் வழிபாடுகளைச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

லட்சுமி குபரேன் வழிபாட்டை முறையாக செய்பவர்கள் ஐஸ்வர்யங்களைக் கட்டாயம் பெற்றிருக்கிறார்கள். நம்நாட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் லட்சம் பேர்களில் சிலர் தானே வெற்றி பெற்று கலெக்டர் ஆகிறார்கள். அதுபோலவே, பூஜை முறை, வழிபாட்டுக் கட்டுப்பாடுகள், தனி மனித ஒழுக்க நெறிகள் ஆகிய காரணிகளைப் பின்பற்றி தினமும் இறைவழிபாடு, நேர்மை, நம்பிக்கை ஆகியவற்றையும் கடைப்பிடித்து லட்சுமி குபேர பூஜை செய்வதால் தான் நம்மில் ஒருசிலர் மட்டுமே பணக்காரர்களாகி விடுகிறார்கள்.

இருளை விலக்கி மனித வாழ்வுக்கு ஒளி தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் நம் மூத்தோர் வகுத்திட்ட பண்டிகைகளில் ஒன்றான இந்த தீபாவளித் திருநாளில் உங்கள் அனைவருக்கும் செல்வத்தை அள்ளித் தருகின்ற லட்சுமி குபேர பூஜை பற்றிய அனைத்து ரகசிய முறைகளையும் மாலை மலர் தொகுத்து தருகிறது.

இந்த தொகுப்பில் உள்ளபடி பூஜைகள் செய்து லட்சுமி குபேரரை வழிபட்டால், நிச்சயம் உங்கள் வாழ்வில் வளம் பெருகும். தீபாவளி ஒளிவிளக்கு போல குபேரன் அருளால் உங்கள் வாழ்விலும் செல்வ ஒளி வீச வாழ்த்துக்கள்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum