தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்று கல்பவிருட்ச வாகன சேவை

Go down

இன்று கல்பவிருட்ச வாகன சேவை Empty இன்று கல்பவிருட்ச வாகன சேவை

Post  meenu Thu Feb 07, 2013 5:38 pm

திருப்பதி திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தில் இன்று ஏழுமலையான் தங்க கல்பவிருட்ச வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

webdunia photo WD
இன்று காலை 9 மணியளவில் கேட்டதை அளிக்கும் கல்ப விருட்ச வாகனத்தில், அலங்கரிக்கப்பட்ட ஏழுமலையான் பூதேவி, ஸ்ரீதேவி சமேதமாக திருமாட வீதிகளில் பவனி வந்தார்.

மதியம் 2 மணி முதல் 4 மணி வரை முதல் ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெறுகிறது.

இரவு சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.

மூன்றான் நாள்

webdunia photo WD
பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று காலை ஏழுமலையான் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.

விலங்குகளிலேயே வலிமையானதாகக் கருதப்படும் சிம்மத்தையே வாகனமாகக் கொண்டு திரு மாட வீதிகளில் பச்சைப் பட்டுடுத்தி ஏழுமலையான் பவனி வந்தார்.

webdunia photo WD
மாலையில், முத்தப் பல்லக்கில் ஆதிசேஷனுடன் பூதேவி, ஸ்ரீதேவி சமேதமாக வலம் வந்து மக்களுக்கு காட்சி அளித்தார்.

பிரம்மோற்சவத்தைக் காண வசதியாக பொதுமக்களுக்கு திரு மாட வீதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum