தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரே தலைப்பு கொண்ட 2 படத்தில் நடிக்கும் ஸ்ருதி

Go down

ஒரே தலைப்பு கொண்ட 2 படத்தில் நடிக்கும் ஸ்ருதி  Empty ஒரே தலைப்பு கொண்ட 2 படத்தில் நடிக்கும் ஸ்ருதி

Post  ishwarya Mon May 27, 2013 6:25 pm

மறைந்த பாலிவுட் நடிகர் ராஜ்கபூர் நடித்து, இயக்கிய 'ஸ்ரீ 420' படத்தில் இடம்பெற்ற பிரபல பாடல் 'ரமய்யா வஸ்தாவய்யா'. இந்த பாடல் வரியை தனது இந்தி படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் பிரபுதேவா. தமிழில் வெளியான உனக்கும் எனக்கும் படம், தெலுங்கு படத்தின் ரீமேக். அந்த ஒரிஜினலை (தெலுங்கு படத்தை) இயக்கியவர் பிரபுதேவா.

தற்போது அதே படத்தை இந்தியில் அவர் இயக்கி வருகிறார். இப்படத்துக்குதான் ரமய்யா வஸ்தாவய்யா என்று தலைப்பிட்டுள்ளார். இதில் புதுமுக நாயகனுக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார். இப்பட படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.

இதற்கிடையே ரமய்யா வஸ்தாவய்யா என்ற பெயரிலேயே தெலுங்கிலும் ஒரு படம் உருவாகிறது. இதில் ஜூனியர் என்டிஆர் நாயகன். சமந்தா நாயகி. இன்னொரு நாயகி வேடத்துக்கு பலரிடம் பேசினர். கடைசியாக ஒப்பந்தமானவர் ஸ்ருதி. இது குறித்து ஸ்ருதி கூறுகையில், நான் நடிக்கும் இரண்டு படங்களுக்கும் ஒரே பெயர் அமைந்தது, ஏதேச்சையாக நடந்தது. பெயர் ஒன்றாக இருந்தாலும் இரண்டு படங்களுக்கும் 1 சதவீதம் கூட ஒற்றுமை இருக்காது.

இரண்டுமே இரண்டு வகையான படங்கள். அதே போல் எனது கதாபாத்திரமும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இருக்காது என்றும் அந்த அளவுக்கு வித்தியாசமாக இருக்கும் எனவும் கூறினார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு… கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்!
» விஜய் நடிக்கும் ‘ராஸ்கல்’… ‘என்னய்யா தலைப்பு இது’?
» வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு... கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்!
»  அஜித் நடிக்கும் படத்தின் தலைப்பு ரெட்டை தலை
» அஜித் நடிக்கும் படத்தின் தலைப்பு ரெட்டை தலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum