தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாப விமோசனம் தரும் பசு தானம்

Go down

  பாப விமோசனம் தரும் பசு தானம் Empty பாப விமோசனம் தரும் பசு தானம்

Post  ishwarya Fri May 24, 2013 12:47 pm



பாப விமோசனம் தரும் பசு தானம்தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்தால் கெடுதல் என்றும், இதற்கு அடுத்து எட்டிற்குள் வந்தால் லாபமாகவும் சொல்லப்படுகிறது.

3லிருந்து 5க்குள் அமைந்தால் மனத் திருப்தியையும், 1ல் முடிவது பயத்தையும் உண்டுபண்ணும். பொதுவாக நாலு கால் பிராணி வாங்குவதற்கென்றே ஜோதிடத்தில் சில விதிமுறைகள் உள்ளன. பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது.

பசுக்களை நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதைப் பராமரிக்கக்கூடிய சக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அல்லது, ஆலயங்களில் தானமாக பசுவைக் கொடுக்கலாம். தானம் செய்ய வேண்டிய பசு கன்றுடன் கூடியதாக இருக்க வேண்டும். கூடுமானவரை முதல் கன்றாக இருந்தால் உத்தமம்.

கொம்பு, கால், குளம்பு போன்றவை உடையாமலும், வியாதி இல்லாமலும் ஆரோக்கியமாக உள்ள பசுவையே தானம் செய்ய வேண்டும். பசுவை அந்தணர் தானமாக வாங்கினால் ஆறு மாத காலத்திற்கு புரோகிதத்தால் ஜீவனம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், விசேஷமாக காயத்ரி ஜெபத்தை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.

பசுவை தானம் செய்பவர்கள் குளித்து, சூரியனை வணங்கி கிழக்கு முகமாக இருந்து தங்கள் கோரிக்கையை சொல்லி தானம் கொடுக்கலாம். தானம் தர வேண்டிய பசுவின் இரு கொம்புகளிலும் சிறிது தங்கம் சேர்த்த பூண் பூட்டப்பட வேண்டும். நான்கு கால்களிலும் வெள்ளியால் செய்த சலங்கை அணிவிக்கப்பட வேண்டும்.

பட்டுத்துணி அதன்மீது அணிவித்து, அந்த பசு மாட்டிற்கு தேவையான ஒரு வருட உணவையும் சேர்த்தே தானம் செய்ய வேண்டும். தானம் வாங்குபவருக்கு ஆறு மாதத்திற்கு தேவையான பொருளோ, பணமோ கொடுக்க வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அன்னதானம், வஸ்திர தானம் (துணி தானம்) போன்றவைகளை பொருள் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். பசு தானம் மட்டும், அதை பராமரிக்க சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே தர வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum