தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவான்மியூரில் இன்று ஸ்ரீ ஸமுச்சித விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

Go down

ஸ்ரீ -  திருவான்மியூரில் இன்று ஸ்ரீ ஸமுச்சித விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் Empty திருவான்மியூரில் இன்று ஸ்ரீ ஸமுச்சித விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

Post  ishwarya Fri May 24, 2013 12:25 pm

சென்னை: சென்னை திருவான்மியூர் எல்.பி.ரோட்டில் உள்ள ஸ்ரீ ஸமுச்சித விநாயகர் ஆலயத்தில் பக்த ஜன சபா சார்பில் ஜீர்ணோதாரண நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடக்கிறது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி தலைமை ஏற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். சுமார் 197 ஆண்டுகளுக்கு மேலாக பிரசித்தி பெற்று அருட் சக்தியாய் விளங்கும் ஸ்ரீஸமுச்சித விநாயகர் மற்றும் ஸ்ரீவள்ளிதேவசேன சுப்பிரமணியர், ஐயப்பன், ஆஞ்சநேயர், துர்கை, ராமர், லட்சுமணன், சீதை, லட்சுமி நரசிம்மர், நவகிரகங்கள் மற்றும் புதிதாக சிவன் சந்நிதி, அம்மன் சந்நிதி மற்றும் விநாயகருக்கு கருவறை விமானம் அமைத்து திருப்பணிகள் முடிந்துள்ளது.

இன்று நான்காம் காலயாக பூஜைகள், மகாபூர்ணாஹுதி, காலை 7 மணி அளவில் கடம் புறப்பாடு, 8 மணிக்கு விமான கும்பாபிஷேகம், மூலஸ்தானம் மற்றும் பரிவாரங்கள் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அன்னதானம் ஆகியவை நடைபெறும். இரவு 7 மணி அளவில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மண்டல பூஜை 16-2-13 முதல் 4-4-13 வரை நடைபெறும். விஷேச காலங்களில் வேதபாராயணம், தேவார திருமுறைகள், நாதஸ்வர இன்னிசை கச்சேரிகள் நடைபெறும். ஆலய கும்பாபிஷேக விழா நிர்வாக கமிட்டி நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum