தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உத்திரகோசமங்கை திருக்கோயில்

Go down

உத்திரகோசமங்கை திருக்கோயில்  Empty உத்திரகோசமங்கை திருக்கோயில்

Post  ishwarya Wed May 22, 2013 6:04 pm

ஸ்தல வரலாறு...... ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்திரகோசமங்கை என்ற பாடல் பெற்ற ஸ்தலம்.மாணிக்கவாசகர் அதிக நாள் இந்த ஆலயத்தில் தங்கி இருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.சுவாமிக்கு மங்களநாதர் என்று பெயர்.

இங்கு நடராஜர் சிலை மரகதத்தில் உள்ளது.இந்த நடராஜர் தான் ஆதி நடராஜர் என்றும் சொல்லப்படுகிறது.அதாவது தில்லை நடராஜரக்கு முன்பு இருந்தே இந்த ஆலயம் உள்ளது.ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே நடராஜரை மரகத கோலத்தில் தரிசிக்கமுடியும்.

மற்ற நாட்களில் சந்தனகாப்பு சார்த்தபட்டிருக்கும்.ஆரூதரா தரிசனம் முடிந்த அடுத்த நாள் மீண்டும் சந்தன காப்பு சார்த்தப்பட்டு அடுத்த ஆண்டு ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே களையப்படும்.இறைவன் உமையவள் மட்டும் காணுமாறு நடனம் ஆடியது உத்திரகோசமங்கையில் மட்டுமே.

இங்கு இறைவன் உமயவளக்கு வேதம் உபதேசித்து நாட்டியமும் காட்டி அருளியதாக வரலாறு.இங்கு உள்ள நடராஜர் சபை ரத்தின சபை என்று அழைக்க படுகிறது.உத்திரகோசமங்கை என்பது அன்னை உமயவளையே குறிக்கும்.

ரகசியமாக உபதேசம் அளிக்கப்பட்ட மங்கை என்று பொருள்.இங்குள்ள ஸ்தல விருட்சம் 3000 ஆண்டு பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.

போக்குவரத்து வசதி.... ராமேஸ்வரம் செல்ல சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் வசதியும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதியும் உள்ளது. பின்னர் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum