தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் ஈழ நாடு உருவாகும். அது மொத்த இலங்கையாக கூட இருக்கலாம் - சீமான் பேச்சு

Go down

தமிழ் ஈழ நாடு உருவாகும். அது மொத்த இலங்கையாக கூட இருக்கலாம் - சீமான் பேச்சு Empty தமிழ் ஈழ நாடு உருவாகும். அது மொத்த இலங்கையாக கூட இருக்கலாம் - சீமான் பேச்சு

Post  ishwarya Mon May 06, 2013 5:04 pm




இயக்குநர் சீமான் நேற்று இரவு பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் நடத்திய இலங்கை தமிழர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.இரவு 7.30க்கு கூட்ட மேடைக்கு அவர் வந்தார். 9.15க்கு பேசத்தொடங்கிய அவர் 11.05க்கு தனது பேச்சை முடித்தார்.

இரண்டு மணிநேரமும் அவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தே பேசினார்.

நான் பிரபாகரனின் தம்பி. நான் தலைமறைவாகி ஓட மாட்டேன். நான்ஜெயிலுக்குப்போக வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். நான் சிறைக்குப்போக அஞ்ச மாட்டேன். பதுங்கி இருந்தது நெல்லை சீமையில் பாயத்தான்! நான் எப்படியும் சாகப்போகிறேன். அது என் இனத்துக்காக என்றால் எனக்கு பெருமை தான்.

திருச்செந்தூர் வந்த மத்திய மந்திரி லல்லு பிரசாத்துக்கு ஒரு ஆட்டுக்குட்டி பரிசாக வழங்கினார்கள். அந்த ஆட்டுக்குட்டி தாயை பிரிந்து பால் குடிக்காமல் தவிப்பதை பார்த்து அதிகாரிகள் ஓடோடி வந்து ஆட்டுக்குட்டியின் தாயை பீகாருக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.என்ன கரிசனம்..ஆட்டுக்குட்டி மீதுள்ள பாசம் கூட தமிழர்கள் மீது இல்லையே? அங்கே என் உறவுகள் சாவுகிறார்கள். தாயையும் தந்தையையும் பிரிந்து அனாதையாக அழுகிறார்கள். ஆட்டுக்குட்டியை ஒன்று சேர்த்தவர்கள் தமிழர்களை ஒன்று சேர்க்க முயற்சி எடுக்கவில்லையே.

அங்கே இருக்கும் உறவுகள் நம்மை நம்பி இருக்கிறார்கள். பிரபாகரன் நம் உயிரை கேட்கவில்லை. உணர்வை கேட்கிறார்.நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேனாம். எங்கே இருக்கிறது இறையாண்மை? பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையை தாக்கியபோது, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க தயாரானார்கள். நமது கடல் எல்லையில் மீன்பிடித்த மீனவர்களை சிங்களர்கள் சுட்டுக்கொன்றார்கள். அப்போது யாருமே தட்டிக்கேட்க வில்லையே. பாகிஸ்தானுடன் என்றால் கிரிக்கெட் விளையாடமாட்டார்கள். இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எங்கே இருக்கிறது இறையாண்மை.

ஜப்பான், ஒக்கனேக்கல் குடிநீர் திட்டத்துக்கு கடன் கொடுக்கிறது.அதை கொடுக்காதே என்று கர்நாடகாக்காரன் ஜப்பானுக்கு கடிதம் எழுதுகிறான். முல்லை பெரியாறு' காவிரியில் தண்ணீர் விட மறுக்கிறார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை.தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றி பேசக்கூடாது என்றால் பிரபாகரனை எதிர்த்தும் பேசக்கூடாது. எதிர்த்து பேசுகிறவர்களை விட்டு விடுகிறார்கள். பிரபாகரன் பேட்டி கொடுத்தால் இந்தியா முழுவதும் செய்தி வருகிறது. அவரைப் பற்றி பேசினால் தடையா? இந்த தடையை உடைக்க வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய்-சீமான் சந்திப்பு – மூன்று மணி நேரம் பேச்சு
» ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம்! சீமான் பரபரப்பு பேச்சு!!
» தமிழ் சினிமா என்னை மறந்து விட்டது - சீமான்!
» வந்தேறிகள் சுகவாழ்வு வாழ, ஒரு தமிழ் தாய்க்கு அனுமதி மறுப்பதா? – சீமான் கண்டனம்
» தமிழ் சினிமாவில் டிராபிக்ஜாம் சென்னையில் ஒரு நாள் விழாவில் கே.எஸ்.ரவிகுமார் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum