தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செட்டி புண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில்

Go down

ஸ்ரீ - செட்டி புண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில் Empty செட்டி புண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில்

Post  meenu Mon Apr 01, 2013 12:30 pm

சுவாமியின் திருநாமம் ஸ்ரீ தேவநாதன், தாயார் திருநாமம் ஸ்ரீ ஹேமாப்ஜவல்லி தவிர ஸ்ரீராமன், சன்னதி உண்டு. ப்ராசினமாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கிறார். ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீதேசிகன் எழுந்தருளி இருக்கிறார்கள்.

ஆகமம் ஸ்ரீவைகானசம், தீர்த்தம் காஞ்சீபுரம் தாத்தாசார்யர்கள். இந்த கிராமம் சிங்கப்பெருமள் கோவிலுக்கு மேற்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது எண்- 60c தாம்பரம், வடகால் பஸ். இந்த கிராமம் வழியாக செல்கிறது. சிங்கபெருமாள் கோவிலில் இருந்து அர்ச்சகர் காலை 8-9, மாலை 4-5 வந்து இரண்டு கால திருவாராதனம் செய்கிறார்.

350 வருடங்களுக்கு முன்பாகவே ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சன்னதி நிர்மானம் பண்ணப்பட்டது. பிறகு சிரஸ்தார் ராவ்ஸாஹிப் ரங்காச்சார் சுவாமி பிரயத்தனத்தில் திருவேந்திபுரம் ஸ்ரீ தேவநாதனுடைய மற்றொரு அதி சுந்தரமான பிரயோக சுகக்ரத்துடன் சேவை தரும் திவ்ய மங்கள விக்ரகத்தை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு தம் கிராமமாகிய செட்டிப் புண்ணியத்தில் கீலக வைகாசி மகம் நட்சத்திரத்தில் எழுந்தருளப் பண்ணினார்.

இந்த பெருமாள் நித்ய ஆராதனத்துடன் 1848 வைகாசி 22-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்த ஊருக்கு எழுந்தருளினார். இவரும் ஒரு யோக ஹயக்ரீவரும் ஏள்ளப் பண்ணபட்டார். இந்த விஷயம் அந்த வருட தெற்கு ஆற்காடு கவர்மெண்ட் கெஜெட்டில் கண்டிருக்கிறது என்று தெரிகிறது.

பிறகு தாயார், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ ஆண்டாள் பிரதிஷ்டை, இத்தலத்திற்கு பிறகு முடும்பை ராமசுவாமி அய்யங்கார் பிரயத்னத்தினால் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் இருந்து ஸ்ரீராமன், சீதா, லட்சுமணன், அனுமார் வண்டலூருக்கு 5.10.1868 எழுந்தருளப் பண்ணப்பட்டு, பின்பு மேற்படி ராமசுவாமி அய்யங்கார் பெங்களூர் வாசம் போகும் சமயத்தில் இந்த ராமனை தம் க்ராமமான செட்டிப்புண்ணியத்தில் எழுந்தருளப் பண்ணினார். தற்போது இங்கு தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார். முதல் மைசூர் திவான் வீரவல்லி ரங்காச்சார் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் (1831-1883)

திருவிழாக்கள்.........

தை மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை திருப்பார்பேட்டை உத்சவம் கிராமத்தாரால் நடத்தப்படுகிறது. தவிர கோவிலில் ஒப்படைக்கப்பட்ட அறக்கட்டளை மூலமாக தை வெள்ளி ஸ்ரீ ஜெயந்தி, ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீதேசிகன் சாத்துமுறை, பெருமாள் அவதார உத்சவம் (வைகாசி மகம்) தீபோத்சவம் நடக்கின்றன. சத்யயன உத்சவம் சாத்துமுறை விஜயதசமி ஆடிப்பூரம் பங்குனி உத்திரம் உடையவர் சாத்துமுறை, ஸ்ரீராமநவமி உத்சவங்கள் உபயகாரர்கள் மூலமாக நடைபெறுகிறது.

கோவில் திருப்பணி.......

அநேக காலத்திற்கு பிறகு 3.2.1993 பாலாலயம் நடந்தது. 17.5.93 அன்று அஷ்டபந்தன மகா ஸம்ப்ரோஷணம் நடந்தது. இதற்கு முன் 100 வருடத்திற்குள் ஸம்ப்ரோஷணம் நடந்ததாக தெரியவில்லை என பெரியோர்கள் சொல்ல கேள்வி. இந்த திருக்கோவில் இந்து சமய அறநிலைய ஆய்வுத்துறையில் கீழ் செயல்பட்டு வரும் திருக்கோவில் ஆகும். ஒரு செயல் அலுவலர் நிர்வகிக்கிறார்.

5 பேர் கொண்ட அறங்காவலர் குழு அறநிலையத்துறையில் நியமிக்கப்படுகிறார்கள். தற்போது ஒருநபர் திரு.சி.வி.பழனி மட்டும் தர்மகர்த்தாவாக இருக்கிறார். இந்த திருக்கோவிலுக்கு கிராமத்தில் 55 ஏக்கர் நஞ்சை புஞ்சை நிலங்களும் (ஒரு பெரிய தோப்பும்) உள்ளது. காலி மனையும் உள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்த முடும்பை ரங்கசுவாமி அய்யங்கார் குடும்பத்தினர் (ஸ்ரீ ராமனை எழுந்தருள பண்ணியவர்கள்) அவர்கள் வீட்டை முடும்பை ராஜகோபால அய்யங்கார் மூலமாக சன்னதிக்கு செட்டில்மெண்ட் பண்ணினார். தவிர இந்த வீட்டை அவர்கள் அவ்வப்போது பணம் செலவழித்து நல்லவிதமாக வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் குடும்பத்தினர் சன்னதி கைங்கர்யபரர்களுக்கு உசிதமாக உதவுகிறார்கள். இந்த ஸ்ரீதேவநாதன் இங்கு எழுந்தருளி 100-வது வருடம் ஆன போது (13.6.1948 சர்வதாரி வைகாசி) 10 நாட்கள் முடிய விசேஷ உத்சவம் கொண்டாடப்பட்டது. இதை வெண்பாக்கம் ஸ்ரீமான் வி.வி.சீனிவாச அய்யங்கார் முன்னின்று நடத்தினார்.

வடகலை சம்பிராயத்தை சேர்ந்த அநேக சுவாமிகள் இந்த உத்சவத்தில் பங்கேற்றனர். திருக்கோவில் வருவாய் இந்த கோவிலுக்கு சொந்தமாக நஞ்சை 33,00, புஞ்சை 22.11.-55.11 நிலம் உள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 35,000.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum